பக்கம் எண் :
 
5முத்துவீரியம்

கூறுதல் வரலாற்று முறைமையின் வாராதார் நூல்களைக் கற்பிக்கவும் கற்கவும் புகின்,

‘‘பொய்படு மொன்றோ புனைபூணுங் கையறியாப்
பேதை வினைமேற் கொளின்’’ (குறள். 836)

என்றவாறேயாய் நூல்களருமையும் பெருமையும் கெட்டுப் பயன் படாவாமென்பது
கருதியென்க. (நன் - பொதுப்பாயிரம் - 3)

‘‘மலையே
அளக்க லாகாப் பெருமையும் அருமையும்
மருங்ககல முடைமையும் ஏறற் கருமையும்
பொருந்தக் கூறுப பொச்சாப் பின்றி.’’

‘‘நிலத்தின் இயல்பே நினைக்குங் காலைப்
பொறையுடை மையொடு செய்பாங் கமைந்தபின்
விளைதல் வண்மையும் போய்ச்சார்ந் தோரை
இடுதலும் எடுத்தலும் இன்னண மாக
இயையக் கூறுப இயல்புணர்ந் தோரே.’’

‘‘பூவின தியல்பே பொருந்தக் கூறின்
மங்கல மாதலும் நாற்ற முடைமையும்
காலத்தின் மலர்தலும் வண்டிற்கு நெகிழ்தலும்
கண்டோ ருவத்தலும் விழையப் படுதலும்
உவமத் தியல்பின் உணரக் காட்டுப.’’

‘‘துலாக்கோல் இயல்பே தூக்குங் காலை
மிகினும் குறையினும் நில்லா தாகலும்
ஐயந் தீர்த்தலும் நடுவு நிலைமையோடு
எய்தக் கூறுப இயல்புணர்ந் தோரே’’

என வருவனவற்றால் மலை, நிலம், பூ, துலாக்கோல் ஆகிய இவற்றின் இயல்பை
அறியலாம்.

“பெய்தமுறை யன்றிப் பிறழ உடன்றருஞ்
செய்தி கழற்பெய் குடத்தின் சீரே’’

‘‘தானே தரக்கொளி னன்றித் தன்பால்
மேவிக் கொளக்கொடா இடத்தது மடற்பனை’’

‘‘பல்வகை யுதவி வழிபடு பண்பின்
நல்லோரொழித் தல்லோர்க் களிக்குமுடத் தெங்கே’’

‘‘அரிதிற் பெயக்கொண் டப்பொருள் தான்பிறர்க்
கெளிதீ வில்லது பருத்திக் குண்டிகை’’

என வருவனவற்றால் கழற்பெய் குடம், மடற்பனை, முடத்தெங்கு, பருத்திக் குண்டிகை ஆகிய இவற்றின் இயல்பை யறியலாம்.