பக்கம் எண் :
 
6முத்துவீரியம்

மன்மகன் - அரசன் மகன், மானி - மாண்பிறந்த மானமுடையவன்; இருமுதுகுரவர்,
ஆசிரியர், சான்றோர்களை வழிபடுதற்கு விரும்பாதவன். பொச்சாப்பன் - மறதியுடையவன்.
சடிலம் - சடை. வியாகரணம் - இலக்கணம்.

நெல்லைச் சுப்பிரமணிய தேசிகன் எழுத்தொடு சொற்பொருள் யாப்பணி ஐந்தும்
எளிதிற் புலப்பட இயற்றித் தருகென அறைந்தனனாக, உறையூர் முத்துவீரமாமுனிவன்
முத்துவீரியம் எனத் தன் பெயர் நிறீஇ இந்நூலை வகுத்தனன் என்பதாம்.