எழுத்ததிகாரம் | 31 | முத்துவீரியம் |
(இ-ள்) விலை கூறலினும்,
புலம்பலினும், இசையினும், விளியினும் அளவைக்
கடந்திசைக்கும். (105)
போலி எழுத்துக்கள்
106. இகரமும் யகரமு
மிறுதியில் விரவும்.
(இ-ள்.) இகரவுயிரும்,
யகரமெய்யு மிறுதியில் விரவிவரும்.
(வ-று.). பேஇ-பேய்,
நாஇ-நாய். (106)
இதுவுமது
107. அகரமு மிகரமு மைகார
மாகும்.
(இ-ள்.) அகரமும் இகரமும்
புணர்ந்து ஐகாரமாக வொலிக்கும்.
(வ-று.) அ+இ=ஐ. (107)
இதுவுமது
108. அகரமு முகரமு மௌகார
மாகும்.
(இ-ள்.) அகரமும் உரகமும்
புணர்ந்து ஒளகாரமாக வொலிக்கும்.
(வ-று.) அ+உ=ஒள. (108)
எழுத்துச் சாரியைகள்
109. நெட்டெழுத் தெல்லாங்
காரமொடு நிலையும்.
(இ-ள்.) நெட்டெழுத்துக்க
ளெல்லாங் காரச்சாரியை பெறும்.
(வ-று.) ஆகாரம், பிறவுமன்ன.
(109)
இதுவுமது
110. அவற்றுள்,
ஐ, ஒளக்கானு மடையவும்
பெறுமே.
|