பொருளதிகாரம் | 313 | முத்துவீரியம் |
கடலொடு வரவுகேட்டல்
என்பது, ஒருவழித்தணத்தற்
காற்றாது வருந்திய தலைமகள், நம்மை விட்டுப்
போனவர் மீண்டுவரும் பரிசுனக் குரைத்தாரோ வெனக்,
கடலொடு தலைமகன்
வரவுகேட்டல்.
(வ-று.)
ஆரம் பரந்து திரைபொரு நீர்முகில்
மீன்பரப்பிச்
சீரம் பரத்திற் றிகழ்ந்தொளி தோன்றுந்
துறைவர்சென்றார்
போரும் பரிசு புகன்றன ரோபுலி யூர்ப்புனிதன்
சீரம்பர் சுற்றியெற் றிச்சிறந்
தார்க்குஞ் செறிகடலே. (திருக். 182)
கடலொடு புலத்தல்
என்பது, கடலொடு வரவுகேட்ட
தலைமகள், தனக்கு வாய் திறவாமையின், என்
வளை
கொண்டு போனார் திறம் யான் கேட்க, நீ கூறா தொழிகின்ற
தென்னெனப்,
பின்னுமக் கடலொடு புலந்து கூறல்.
(வ-று.)
பாணிகர் வண்டினம் பாடப்பைம்
பொன்றரு வெண்கிழிதம்
சேணிகர் காவின் வழங்கும்புன் னைத்துறைச்
சேர்ப்பர்திங்கள்
வாணிகர் வெள்வளை கொண்டகன்
றார்திறம் வாய்திறவாய்
பூணிகர் வாளர வன்புலி யூர்சுற்றும்
போர்க்கடலே. (திருக். 183)
அன்னமோடாய்தல்
என்பது, கடலொடு புலந்து கூறிய
தலைமகள், புன்னையொடு புலந்து அகன்றவர்
அகன்றே
யொழிவரோ, யானறிகிலேன், நீயாயினும்
சொல்லுவாயாகவென,
அன்னமோடாய்ந்து வரவுகேட்டல்.
(வ-று.)
பகன்றா மரைக்கண் கெடக்கடந் தோன்புலி
யூர்ப்பழனத்
தகன்றா மரையன்ன மேவண்டு நீல மணியணிந்து
முகன்றாழ் குழைச்செம்பொன் முத்தணி
புன்னையின் னும்முரையா
தகன்றார் அகன்றே யொழிவர்கொல்
லோநம் அகன்றுறையே. (திருக். 184)
|