பக்கம் எண் :
 
பொருளதிகாரம்314முத்துவீரியம்

தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்

என்பது, அன்னமொடு வரவுகேட்ட தலைமகள், அதுவும் வாய்திறவாமையின், இனி
அவர் வருகின்றாரல்லர், எம்முயிர்க்குப் பற்றுக்கோடு இனியிதுவே, இதனை நீ யழியா
தொழிவாயென, அவன் சென்ற தேர்வழி நோக்கிக் கடலொடு கூறல்.

(வ-று.)

உள்ளும் உருகி யுரோமஞ் சிலிர்ப்ப வுடையவனாட்
கொள்ளு மவரிலொர் கூட்டந்தந் தான்குனிக் கும்புலியூர்
விள்ளும் பரிசுசென் றார்வியன் றேர்வழி தூரல்கண்டாய்
புள்ளும் திரையும் பொரச்சங்கம் ஆர்க்கும் பொருகடலே. (திருக். 185)

கூடலிழைத்தல்

என்பது, தேர்வழி நோக்கிக் கடலொடு கூறிய தலைமகள், இம்மணற் குன்றின்கண்
நீத்தகன்ற வள்ளலை, உள்ளத்தை நெகிழ்த்து இவ்விடத்தே தரவல்லையோ வெனக்,
கூடற்றெய்வத்தை வாழ்த்திக் கூடலிழைத்து வருந்தல்.

(வ-று.)

ஆழி திருத்தும் புலியூ ருடையான் அருளினளித்
தாழி திருத்தும் மணற்குன்றின் நீத்தகன் றார்வருகென்
றாழி திருத்திச் சுழிக்கணக் கோதிநை யாமலைய
வாழி திருத்தித் தரக்கிற்றி யோவுள்ளம் வள்ளலையே. (திருக். 186)

(கு-ரை.) ஆழி திருத்தும்-கடல் சூழ்ந்த உலகைத் திருத்தும். ஆழி திருத்தும் -
கடல் திருத்துகின்ற. ஆழி திருத்தி - கூடல் இழைத்து.

சுடரொடு புலம்பல்

என்பது, கூடலிழைத்து வருந்துகின்ற, தலைமகள், துறைவர் போக்கு மவர் சூளரவு
மென்னை வருத்துகின்றன, அதன் மேல்நீயும் போகாநின்றாய், யானினி யுய்யுமா
றென்னோவெனச் செல்லா நின்ற சுடரொடு புலம்பல்.

(வ-று.)

காரத்தரங் கந்திரை தோணி சுறாக்கடன் மீனெறிவோர்
போர்த்தரங் கந்துறை மானுந் துறைவர்தம் போக்குமிக்க