பொருளதிகாரம் | 315 | முத்துவீரியம் |
தீர்த்தரங் கன்றில்லைப் பல்பூம்
பொழிற்செப்பும் வஞ்சினமு
மார்த்தரங் கஞ்செய்யு மாலுய்யு
மாறென்கொ லாழ்சுடரே. (திருக். 187)
பொழுதுகண்டு மயங்கல்
என்பது, சுடரொடு புலம்பா நின்றவள்,
கதிரவன் மறைந்தான், காப்பவர் சேயர்,
அதன்மே
லிவ்விடத்து மீனுண்ட அன்னங்களும் போய்த் தஞ்
சேக்கைகளை யடைந்தன,
இனி யானாற்றுமா றென்னோ
வென, மாலைப்பொழுது கண்டு மயங்கல்.
(வ-று.)
பகலோன் கரந்தனன் காப்பவர் சேயர்பற்
றற்றவர்க்குப்
புகலோன் புகுநர்க்குப் போக்கரி
யோனெவ ரும்புகலத்
தகலோன் பயிறில்லைப் பைம்பொழிற்
சேக்கைகள் நோக்கினவா
லகலோங் கிருங்கழி வாய்க்கொழு
மீனுண்ட வன்னங்களே. (திருக். 188)
பறவையொடு வருந்தல்
என்பது, பொழுதுகண்டு வருந்துகின்ற
தலைமகள், இந்நிலைமைக் கண்ணும் என்
உள்நோயறியாது
கண்ணோட்டமின்றித் தம் வயிறோம்புகின்றன,
இஃதென்னை பாவமென,
வண்டானப் பறவையொடு வருந்திக்
கூறல்.
(வ-று.)
பொன்னும் மணியும் பவளமும் போன்று
பொலிந்திலங்கி
மின்னுஞ் சடையோன் புலியூர் விரவா
தவரினுண்ணோய்
இன்னும் அறிகில வாலென்னை பாவம்
இருங்கழிவாய்
மன்னும் பகலே மகிழ்ந்திரை தேரும்வண்
டானங்களே. (திருக். 189)
பங்கயத்தோடு பரிவுற்றுரைத்தல்
என்பது, பறவையொடு வருந்துகின்றவள்,
இவை என் வருத்தங் கண்டிவள்
வருந்தாமல் விரையவர
வேண்டுமென்று ஞாயிற்றை நோக்கித் தங்
கைகுவியா நின்றன,
ஆதலா லென் மாட் டன்புடையன
போலுமெனப், பங்கயத்தோடு பரிவுற்றுக் கூறல்.
|