பக்கம் எண் :
 
பொருளதிகாரம்316முத்துவீரியம்

(வ-று.)

கருங்கழி காதற்பைங் கானலின் தில்லையெங் கண்டர்விண்டார்
ஒருங்கழி காதர மூவெயில் செற்றவொற் றைச்சிலைசூழ்ந்
தருங்கழி காதம் அகலுமென் றூழென் றலந்துகண்ணீர்
வருங்கழி காதல் வனசங்கள் கூப்பும் மலர்க்கைகளே. (திருக். 190)

அன்னமோ டழிதல்

என்பது, பங்கயத்தை நோக்கிப் பரிவுறா நின்றவள், உலகமெல்லாந் துயிலாநின்ற
இந்நிலைமைக் கண்ணும், யான்றுயிலாமைக்குக் காரணமாகிய என் வருத்தத்தைச் சென்று
அவர்க்குச் சொல்லாது, தான்றன் சேவலைப் பொருந்திக் கவற்சியின்றித் துயில்கின்றதென,
அன்னத்தோ டழிந்து கூறல்.

(வ-று.)

மூவல் தழீஇய அருண்முத லோன்றில்லைச் செல்வன்முந்நீர்
நாவல் தழீஇயவிந் நானிலந் துஞ்சும் நயந்தவின்பச்
சேவல் தழீஇச்சென்று தான்றுஞ்சும் யான்றுயி லாச்செயிரெம்
காவல் தழீஇயவர்க் கோதா தளிய களியன்னமே. (திருக். 191)

வரவுணர்ந் துரைத்தல்

என்பது, தலைமக ளன்னத்தோ டழிந்து வருந்தாநிற்பத், தலைமக னொருவழித்
தணர்ந்து வந்தமை சிறைப்புறமாக வுணர்ந்த தோழி, வளைகள்நிறுத்த நிற்கின்றன வில்லை,
நெஞ்சம் நெகிழ்ந்துருகா நின்றது, கண்கள் துயிலின்றிக் கலுழா நின்றன, இவை யெல்லாம்
யான் சொல்ல வேண்டுவதில்லை, நீயே கண்டாய், இதனைச் சென்று அவர்க்குக்
கூறுவாயென, மதியொடு கூறல்.

(வ-று.)

நில்லா வளைநெஞ்சம் நெக்குரு குந்நெடுங் கண்டுயிலக்
கல்லா கதிர்முத்தங் காற்று மெனக்கட் டுரைக்கதில்லைத்
தொல்லோன் அருள்களில் லாரிற்சென் றார்சென்ற செல்லல்கண்டாய்
எல்லார் மதியே யிதுநின்னை யானின் றிரக்கின்றதே. (திருக். 192)

வருத்தமிகுதி கூறல்

என்பது, சிறைப்புறமாக மதியொடு வருத்தங் கூறிச் சென்றெதிர்ப்பட்டு,
வலஞ்செய்து நின்று, நீ போய் அவள்படுகின்ற