பக்கம் எண் :
 
பொருளதிகாரம்317முத்துவீரியம்

வருத்த மென்னாற் கூறுமளவல்லவென, வரைவுதோன்றத் தலைமகள் வருத்தமிகுதி தோழி
கூறாநிற்றல்.

(வ-று.)

வளருங் கறியறி யாமந்தி தின்றுமம் மர்க்கிடமாய்த்
தளருந் தடவரைத் தண்சிலம் பாதன தங்கமெங்கும்
விளரும் விழுமெழும் விம்மும் மெலியும்வெண் மாமதிநின்
றொளிருஞ் சடைமுடி யோன்புலி யூரன்ன ஒண்ணுதலே. (திருக். 193)

ஒருவழித்தணத்தல் முற்றும்.

23. உடன் போக்கு

என்பது, இவ்வாறு ஒருவழித் தணத்தல் நிகழாதாயின் உடன்போக்கு நிகழும்.

அதன்விரி

850. பருவங் கூறலும் படைத்து மொழிதலும்
     மருவமர் கோதையை மகட்பேச் சுரைத்தலும்
     பொன்னணி வுரைத்தலும் பொருள்விலை கூறலும்
     அன்னமென் னடையா ளருமைகேட் டழிதலும்
     தளர்வறிந் துரைத்தலுந் தாழ்குழ லாடன்
     உளநினை வுரைத்தலு முடன்கொண்டு சேறலுக்
     கருமை யுரைத்தலு மாதரங் கூறலும்
     மருவிய தடங்கயல் வாழா ளென்றலும்
     பொருவரு கற்பின் புனைநல னுரைத்தலும்
     துணிந்தமை கூறலுந் துணிவு கேட்டலும்
     துணிவறி வித்தலுந் தொல்லைநாண் விடலும்
     துணிவெடுத் துரைத்தல்கொண்டகலென வுரைத்தலும்
     அடிவழி நினைந்துநின் றவனுளம் வாடலும்
     கொடியிடை யாளைக் கொண்டுசென் றுய்த்தலும்
     ஓம்படுத் துரைத்தலும் வழிப்படுத் துரைத்தலும்
     தேம்படு கோதையைத் திறலடு வேலோன்
     பையக்கொண் டேகலும் பயங்கெட வுரைத்தலும்
     மையமர் கண்ணியை வழியயர் வகற்றலும்