பக்கம் எண் :
 
பொருளதிகாரம்321முத்துவீரியம்

குழவியைப்போலக் கிடந்தரற்றுவாயாகவெனத், தன்னெஞ்சோடு அழிந்து கூறல்.

(வ-று.)

விசும்புற்ற திங்கட் கழுமழப் போன்றினி விம்மிவிம்மி
யசும்புற்ற கண்ணோ டலறாய் கிடந்தரன் றில்லையன்னாள்
குயம்புற் றரவிடை கூரெயிற் றூறல் குழன்மொழியின்
னயம்பற்றி நின்று நடுங்கித் தளர்கின்ற நன்னெஞ்சமே. (திருக். 198)

தளர்வறிந்துரைத்தல்

என்பது, வரைவு மாட்சிமைப்படாதாயின், நீ யவளை யுடன் கொண்டுபோ வென்பது
பயப்பக், கடலையுங் கானலையு நோக்கிக் கண்ணீர் கொண்டு, தன்னாயத்தாரை யெல்லாம்
புல்லிக்கொண்டாள், அவள் கருதிய தின்னதென்று தெரியாதெனத் தோழி தலைமகள்
வருத்தங் கூறல்.

(வ-று.)

மைதயங் குந்திரை வாரியை நோக்கி மடலவிழ்பூங்
கைதையங் கானலை நோக்கிக்கண் ணீர்கொண்டெங் கண்டர்தில்லைப்
பொய்தயங் குந்நுண் மருங்குனல் லாரையெல் லாம்புல்லினாள்
பைதயங் கும்மர வம்புரை யும்மல்குற் பைந்தொடியே. (திருக். 199)

குறிப்புரைத்தல்

என்பது, வருத்தங் கூறிப் போக்குணர்த்தி, அது வழியாக நின்று, என்னைப்
புல்லிக்கொண்டு தன்னுடைய பூவையையும் பந்தையும் பாவையையுங் கிளியையும்,
இன்றென்கைத் தந்தாள், அது நின்னோ டுடன்போதலைக் கருதிப்போலு மெனத்,
தலைமகனுக்குத் தலைமகள் குறிப்புரைத்தல்.

(வ-று.)

மாவைவந் தாண்டமென் னோக்கிதன் பங்கர்வண் டில்லைமல்லல்
கோவைவந் தாண்டசெவ் வாய்க்கருங் கண்ணி குறிப்பறியேன்
பூவைதந் தாள்பொன்னம் பந்துதந் தாளென்னைப் புல்லிக்கொண்டு
பாவைதந் தாள்பைங் கிளியளித் தாளின்றென் பைந்தொடியே. (திருக். 200)