பக்கம் எண் :
 
பொருளதிகாரம்320முத்துவீரியம்

(வ-று.)

மணியக் கணியும் அரனஞ்சம் அஞ்சி மறுகிவிண்ணோர்
பணியக் கருணை தரும்பரன் றில்லையன் னாடிறத்துத்
துணியக் கருதுவ தின்றே துணிதுறை வாநிறைபொன்
அணியக் கருதுகின் றார்பலர் மேன்மேல் அயலவரே. (திருக். 195)

பொன்னணிவுரைத்தல்

என்பது, படைத்துமொழியான் மகட்பேசல் கூறின தோழி, அறுதியாக
முன்றிற்கணின்று, முரசொடு பணில முழங்கக் காப்பணிந்து பொன்னணியப் புகுதாநின்றார்
இன நின்கருத்தென்னோவெனத் தலைமகனுக் கயலவர் பொன்னணிவுரைத்தல்.

(வ-று.)

பாப்பணி யோன்றில்லைப் பல்பூ மருவுசில் லோதியைநற்
காப்பணிந் தார்பொன் னணிவார் இனிக்கமழ் பூந்துறைவ
கோப்பணி வான்றோய் கொடிமுன்றில் நின்றவை யேர்குழுமி
மாப்பணி லங்கள் முழங்கத் தழங்கும் மணமுரசே. (திருக். 196)

அருவிலையுரைத்தல்

என்பது, பொன்னணிவுரைப்பக் கேட்ட தலைமகன், யான்வரைவொடு வருதற்கு நீ
முலைப்பரிசங் கூறுவாயாகவென, எல்லாவுலகமு நல்கினும், எமர் அவளுடைய சிறிய
விடைக்கு விலையாகச் செப்பலொட்டார் இனிப் பெரிய முலைக்கு நீ விலை
கூறுவதென்னோவெனத், தோழி விலையருமை கூறல்.

(வ-று.)

எலும்பால் அணியிறை யம்பலத் தோனெல்லை செல்குறுவோர்
நலம்பா வியமுற்றும் நல்கினும் கல்வரை நாடரம்ம
சிலம்பா வடிக்கண்ணி சிற்றிடைக் கேவிலை செப்பலொட்டார்
கலம்பா வியமுலை யின்விலை யென்னீ கருதுவதே. (திருக். 197)

அருமைகேட்டழிதல்

என்பது, அருவிலை கேட்ட தலைமகன், நீ யவளதருமை கருதாது
அவளதவயவங்களி லுண்டாகிய நயத்தைப்பற்றி விடாது நடுங்காநின்றாய், இனி
மதியைப்பிடித்துத் தரவேண்டி யழுமறியாக்