பக்கம் எண் :
 
பொருளதிகாரம்319முத்துவீரியம்

துணிவொடு வினாவல், போக்கறிவித்தல், நாணிழந்து வருந்தல், துணிவெடுத்துரைத்தல்,
குறியிடங்கூறல், அடியொடு வழிநினைந் தவனுளம்வாடல், கொண்டுசென்றுய்த்தல்,
ஓம்படுத்துரைத்தல், வழிப்படுத்துரைத்தல், மெல்லக்கொண்டேகல், அடலெடுத்துரைத்தல்,
அயர்வகற்றல், நெறிவிலக்கிக்கூறல், கண்டவர் மகிழ்தல், வழிவிளையாடல், நகரணிமை
கூறல், நகர்காட்டல், பதி பரிசுரைத்தல், செவிலிதேடல், அறத்தொடு நிற்றல், கற்புநிலைக்
கிரங்கல், கவன் றுரைத்தல், அடிநினைந்திரங்கல், நற்றாய்க் குரைத்தல், நற்றாய்
வருந்தல், கிளிமொழிக்கிரங்கல், சுடரோடிரத்தல், பருவ நினைந்து கவறல், நாடத்துணிதல்,
கொடிக்குறி பார்த்தல், சோதிடங்கேட்டல், சுவடு கண்டறிதல், சுவடுகண்டிரங்கல்,
வேட்டமாதரைக் கேட்டல், புறவொடு புலத்தல், குரவொடு வருந்தல், விரதியரை
வினாவல், வேதியரை வினாதல், புணர்ந்துடன் வருவோரைப் பொருந்தி வினாவல்,
வியந்துரைத்தல், இயைபெடுத்துரைத்தல், மீளவுரைத்தல், உலகியல்புரைத்தல், அழுங்கு
தாய்க்குரைத்தல் ஆகிய ஐம்பத்தாறு முடன்போக்காம்.

பருவங்கூறல்

என்பது, அலரறிவுறுத்த தோழி, இவள்முலை முதிர்வு கண்டமையால்
மகட்பேசுவார்க்கு எமர் மாறாது கொடுக்கவுங்கூடும், அதுபடாமனிற்ப, நீ முற்பட்டு
வரைவாயாகவெனத், தலைமகனுக்குத் தலைமகள் பருவங் கூறல்.

(வ-று.)

ஒராகம் மிரண்டெழி லாயொளிர் வோன்றில்லை யொண்ணுதலங்
கராகம் பயின்றமிழ் தம்பொதிந் தீர்ஞ்சுணங் காடகத்தின்
பராகம் சிதர்ந்த பயோதரம் இப்பரி சேபணைத்த
இராகங்கண் டால்வள்ள லேயில்லை யேயெமர் எண்ணுவதே. (திருக். 194)

மகட்பேச்சுரைத்தல்

என்பது, பருவங்கூறிய தோழி, படைத்துமொழியான் அயலவர் பலரும்
மேன்மேலும் பொன்னணியக் கருதாநின்றார், நீ விரைய வரைவொடு வருவாயாதல், 
அன்றி யுடன்கொண்டு போவாயாதல், இரண்டினுளொன்று துணிந்து செய்யக் கருதுவாய், 
அதனை யின்றே செய்வாயாகவெனத், தலைமகனுக்கு அயலவர் வந்து மகட்பேசல்
கூறல்.