பக்கம் எண் :
 
பொருளதிகாரம்284முத்துவீரியம்

நமக்குப் பழியேறும், அது கிடக்க, நமக்குதவி செய்தாற்கு நாமுமுதவி செய்யுமா
றென்னோவெனத் தலைமகள் தழையேற்குமாறு வகுத்துக் கூறல்.

(வ-று.)

ஏறும் பழிதழை யேற்பின்மற் றேலா விடின்மடன்மா
ஏறும் அவனிட பங்கொடி யேற்றிவந் தம்பலத்துள்
ஏறும் அரன்மன்னும் ஈங்கோய் மலைநம் இயம்புனங்காய்ந்
தேறும் மலைதொலைத் தாற்கென்னை யாஞ்செய்வ தேந்திழையே. (திருக். 113)

தழையேற்பித்தல்

என்பது, தழையேலா தொழியினும் பழியேறுமாயிற் றழையேற்பதே காரியமென
உட்கொண்டு நிற்ப, அக்குறிப்பறிந்து, இத்தழை நமக்கெளிய தொன்றன்று, இதனை
யேற்றுக்கொள்வாயாக வெனத் தோழி தலைமகளைத் தழையேற்பியா நிற்றல்.

(வ-று.)

தெவ்வரை மெய்யெரி காய்சிலை யாண்டென்னை யாண்டுகொண்ட
செவ்வரை மேனியன் சிற்றம் பலவன் செழுங்கயிலை
அவ்வரை மேலன்றி யில்லைகண் டாயுள்ள வாறருளான்
இவ்வரை மேற்சிலம் பன்னெளி திற்றந்த ஈர்ந்தழையே. (திருக். 114)

தழைவிருப்புரைத்தல்

என்பது, தலைமகளைத் தழையேற்பித்துத் தலைமகனுழைச் சென்று, நீ தந்த தழையை
யான்சென்று கொடுத்தேன் அது கொண்டவள் செய்தது சொல்லிற் பெருகுமெனத் தலைமகள்
விருப்பங் கூறல்.

(வ-று.)

பாசத் தளையறுத் தாண்டுகொண் டோன்றில்லை யம்பலஞ்சூழ்
தேசத் தனசெம்மல் நீதந் தனசென்றி யான்கொடுத்தேன்
பேசிற் பெருகும் சுருங்கு மருங்குல் பெயர்ந்தரைத்துப்
பூசிற் றிளலன்றிச் செய்யா தனவில்லை பூந்தழையே. (திருக். 115) (19)

சேட்படை முற்றும்.