பொருளதிகாரம் | 343 | முத்துவீரியம் |
தொழுதிரந்து கூறல்
என்பது, பகல் வரவு விலக்கின
தோழி, இவன் இரவு வரவுங் கூடுமென
வுட்கொண்டு,
நின்னை யெதிர்ப்பட வேண்டி அழுது வருந்தாநின்ற
இவள் காரணமாக,
அரிக்கும் யாளிக்கும் வெருவி
யானைகள் திரண்டு, புடைபெயராத மிக்க
இருளின்கண்
வாராதொழி வாயாக வென்று
நின்கழல்களைக் கையாற்றொழுது,
நின்னையிரந்தேனென,
வரைவு தோன்றத்
தலைமகனைத் தொழுதிரந்து கூறல்.
(வ-று.)
கழிகட் டலைமலை வோன்புலி யூர்கரு
தாதவர்போல்
குழிகட் களிறு வெரீஇயரி யாளி
குழீஇவழங்காக்
கழிகட் டிரவின் வரல்கழல் கைதொழு
தேயிரந்தேன்
பொழிகட் புயலின் மயிலிற் றுவளும்
இவள்பொருட்டே. (திருக். 255)
தாயறிவு கூறல்
என்பது, தொழுதிரந்து கூறவும்,
வேட்கை மிகவாற் பின்னுங் குறியிடைச் சென்று
நிற்ப, அக்குறிப்பறிந்து, நங்கானலிடத்
தரையிரவின்கண் ஒருதேர் வந்ததுண்டாகக்
கூடுமென வுட்கொண்டு, அன்னை சிறிதே கண்ணுஞ்
சிவந்து என்னையும் பார்த்தாள்,
இருந்தவாற்றா
னிவ்வொழுக்கத்தை யறிந்தாள் போலுமெனத்,
தோழி தலைமகளுக்குக்
கூறுவாள் போன்று,
சிறைப்புறமாகத் தலைமகனுக்கு வரைவுதோன்றத்
தாயறிவு கூறல்.
(வ-று.)
விண்ணுஞ் செலவறி யாவெறி
யார்கழல் வீழ்சடைத்தீ
வண்ணன் சிவன்றில்லை மல்லெழிற்
கானல் அரையிரவின்
அண்ணல் மணிநெடுந் தேர்வந்த
துண்டாம் எனச்சிறிது
கண்ணுஞ் சிவந்தன்னை யென்னையும்
நோக்கினள் கார்மயிலே. (திருக். 256)
மந்திமேல் வைத்து வரைவுகடாதல்
என்பது, சிறைப்புறமாகத் தாயறிவு
கூறிச்சென் றெதிர்ப்பட்டு, ஒரு கடுவன் தன்
மந்திக்கு மாங்கனியைத் தேனின்கண்
தோய்த்துக் கொடுத்து நுகர்வித்துத்
தம்முளின்புறுவது
கண்டு, இது நங்காதலர்க்கு
நம்மாட் டரிதாயிற்றென, நீ வரை
|