பக்கம் எண் :
 
பொருளதிகாரம்342முத்துவீரியம்

(வ-று.)

சிறார்கவண் வாய்த்த மணியிற் சிதைபெருந் தேனிழுமென்
றிறால்கழி வுற்றெஞ் சிறுகுடி லுந்தும் இடமிதெந்தை
உறாவரை யுற்றார் குறவர்பெற் றாளுங் கொடிச்சியும்பர்
பெறாவருள் அம்பல வன்மலைக் காத்தும் பெரும்புனமே. (திருக். 252)

ஏதங்கூறி யிரவரவு விலக்கல்

என்பது, உண்மையுரைத்து வரைவு கடாய தோழி, நீ வரைவொடு வாராயாயின்,
சிங்கந் திரண்டு, தனக்கு யானையாகிய வுணவுகளைத் தேடு மிருளின்கண், நினது கைவேல்
துணையாக நீவந்தருளா நின்ற விஃதே யெங்களுக்குத் துன்பமாகத் தோன்றா நின்றது, 
இனி யிவ்விருளிடை வாராதொழிவாயென, ஏதங் கூறித் தலைமகனை இரவரவு விலக்கல்.

(வ-று.)

கடந்தொறும் வாரண வல்சியின் நாடிப்பல் சீயங்கங்குல்
இடந்தொறும் பார்க்கும் இயவொரு நீயெழில் வேலின்வந்தால்
படந்தொறுந் தீயர வன்னம் பலம்பணி யாரினெம்மைத்
தொடர்ந்தொறுந் துன்பென்ப தேயன்ப நின்னருள் தோன்றுவதே. 
                                                      (திருக். 253)

பழிவரவுரைத்துப் பகல்வரவு விலக்கல்

என்பது, இவ்விருளிடை வாராதொழி கென்றது பகல்வரச் சொன்னவாறாமென
வுட்கொண்டு, பகற்குறிச் சென்று நிற்பத், தோழி யெதிர்ப்பட்டுப், பகல்வந் தெமக்குச்
செய்யாநின்ற மெய்யாகிய வருள் புறத்தாரறிந்து வெளிப்பட்டுப் பழியாகப் புகுதா நின்றது,
இனிப் பகல் வரவொழிவாயாக வெனப், பழிவருதல் கூறிப் பகல் வரவுவிலக்கல்.

(வ-று.)

களிறுற்ற செல்லல் களைவயிற் பெண்மரங் கைஞ்ஞெமிர்த்துப்
பிளிறுற்ற வானப் பெருவரை நாட பெடைநடையோ
டொளிறுற்ற மேனியன் சிற்றம் பலநெஞ் சுறாதவர்போல்
வெளிறுற்ற வான்பழி யாம்பகல் நீசெய்யும் மெய்யருளே. (திருக். 254)