பக்கம் எண் :
 
பொருளதிகாரம்345முத்துவீரியம்

இரவுடம்பட்டாள் போன்று பகல்வரவு விலக்கல்

என்பது, இவள் மருந்தில்லையோ வென்றது யானிரவுக் குறிச்செல்லின் 
மழைக்கா லிருளானெதிர்ப்பட லருமையான், வேட்கையுற்றுப் பகற்குறி யுடம்பட்டாளென
வுட்கொண்டு, பகற்குறிச் செல்லாநிற்பத், தோழி யெதிர்ப்பட்டு, பகல்வந் தருளா நின்றது
அவளுக்கு வருத்த முறும்படியாக மிக்கவலராகா நின்றது, அதனாற் பகற்குறி 
வரற்பாலை யல்லையென, இரவுக்குறி யுடம்பட்டாள்போன்று பகற்குறி விலக்கா நிற்றல்.

(வ-று.)

இறவரை யும்பர்க் கடவுட் பராய்நின் றெழிலியுன்னிக்
குறவரை யார்க்குங் குளிர்வரை நாட கொழும்பவள
நிறவரை மேனியன் சிற்றம் பலநெஞ் சுறாதவர்போல்
உறவரை மேகலை யாட்கல ராம்பகல் உன்னருளே. (திருக். 260)

இரவும் பகலும் வரவு விலக்கல்

என்பது, இரவுடம் பட்டாள் போன்று பகல்வரவு விலக்கினதோழி, நீபகல்வரின்
அலர் மிகுதியா னெங்களுக்கும், மிக்க பழிவந்தெய்தும், இராவரி னெவ்வாற்றானு நின்னை
யெதிர்ப்படுதலருமையாற் சிறிதும்பயனில்லை, அதனால் நீ யிருபொழுதும்
வரற்பாலையல்லை யென, இரவும் பகலும் வரவு விலக்கல்.

(வ-று.)

சுழியா வருபெரு நீர்சென்னி வைத்தென்னைத் தன்றொழும்பிற்
கழியா அருள்வைத்த சிற்றம் பலவன் கரந்தருமான்
விழியா வரும்புரி மென்குழ லாடிறத் தையமெய்யே
பழியாம் பகல்வரின் நீயிர வேதும் பயனில்லையே. (திருக். 261)

காலங்கூறி வரைவுகடாதல்

என்பது, இருபொழுதும் வரவு விலக்கின தோழி, மதிநிரம்பா நின்றது, வேங்கை
பூவாநின்றன, இனி நினக்கு வரைவொடு வருதற்குக் காலமிது வெனக், காலங் கூறி வரைவு
கடாதல்.