பக்கம் எண் :
 
பொருளதிகாரம்346முத்துவீரியம்

(வ-று.)

மையார் கதலி வனத்து வருக்கைப் பழம்விழுதேன்
எய்யா தயின்றிள மந்திகள் சோரும் இருஞ்சிலம்பா
மெய்யா அரியதென் அம்பலத் தான்மதி யூர்கொள்வெற்பின்
மொய்யார் வளரிள வேங்கைபொன் மாலையின் முன்னினவே. (திருக். 262)

கூறுவிக்குற்றல்

என்பது, காலங்கூறி வரைவுகடாவவும் வரைவுடம்படாமையின், அவடன்னைக்
கொண்டே கூறுவிப்பாளாக, அலரான் வரு நாணினையும் காணாமையான்
வருமாற்றாமையையும்பற்றிக் கிடந்த நம்மல்லலை, நம்மாற் றலையளிக்கப்படுவா ரிவ்வாறு
வருந்துத தகாதெனத் தாமாக அறிகின்றிலராயின், நாம் சொல்லுந் தன்மைகளென்னோ
வெனப் புலந்து, நீயாகிலும் போய்க் கூறென்பது குறிப்பாற்றோன்றத், தலைமகன்
வரைவுடம்படாமையைத் தோழி தலைமகட்குக் கூறல்.

(வ-று.)

தேமாம் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்துவிண் ணோர்வணங்க
நாமா தரிக்க நடம்பயில் வோனைநண் ணாதவரின்
வாமாண் கலைசெல்ல நின்றார் கிடந்தநம் அல்லல்கண்டால்
தாமா அறிகில ராயினென் னாஞ்சொல்லுந் தன்மைகளே. (திருக். 263)

செலவுநினைந் துரைத்தல்

என்பது, வரைவுடம்படாமையின் தோழி தலைமகனொடு புலந்து கூறக்கேட்டு,
அக்குறிப்பறிந்து, இக்கல்லதரின் கண்நீர் வந்தவாறென்னோ வென்று வினவுவாரைப்
பெற்றேமாயின், இத்தன்மையை யுடைத்தாகிய மிக்க இருளின்கண் யாமவருழைச்
சேறலரிதன்று, சென்றே மாயினு மவ்வாறு சொல்லுவாரில்லை யெனத், தலைமகள் செலவு
நினைந்து கூறல்.

(வ-று.)

வல்சியின் எண்கு வளர்புற் றகழமல் கும்மிருள்வாய்ச்
செல்வரி தன்றுமன் சிற்றம் பலவரைச் சேரலர்போல்
கொல்கரி சீயம் குறுகா வகைபிடி தானிடைச்செல்
கல்லதர் என்வந்த வாறென்ப வர்ப்பெறின் கார்மயிலே. (திருக். 264)