பக்கம் எண் :
 
பொருளதிகாரம்347முத்துவீரியம்

பொலிவழி வுரைத்து வரைவுகடாதல்

என்பது, தலைமகடன்னை யெதிர்ப்படலுற்று வருந்தா நின்றமை சிறைப்புறமாகக்
கேட்ட தலைமகன் குறியிடை வந்து நிற்பத், தோழி யெதிர்ப்பட்டு, என ஐயரதுகாவலை
நீவி, நின்வயத்தளாய் நின்று, பொலிவழிந்து வருந்தா நின்றவளை நீ வரைந்து
கொள்ளாதிவ்வாறிகழ்ந்து மதித்தற்குக் காரணமென்னோ வெனத், தலைமகள் பொலிவழிவு
கூறி வரைவுகடாதல்.

(வ-று.)

வாரிக் களிற்றின் மருப்புகு முத்தம் வரைமகளிர்
வேரிக் களிக்கும் விழுமலை நாட விரிதிரையின்
நாரிக் களிக்கமர் நன்மாச் சடைமுடி நம்பர்தில்லை
ஏரிக் களிக்கரு மஞ்ஞையிந் நீர்மையென் எய்துவதே. (திருக். 265) (23)

வரைவுமுடுக்கம் முற்றும்.

 

24. வரைபொருட்பிரிதல்

852. முலைவிலை கூறலும் வரைவுடம் படுத்தலும்
     வரைபொருட் கேகலை யுரையவட் கென்றலும்
     நீகூ றென்றலுஞ் சொல்லா தேகலும்
     பிரிந்தமை கூறலு நெஞ்சொடு கூறலும்
     நெஞ்சொடு வருந்தலும் வருத்தங்கண் டுரைத்தலும்
     வற்பு றுத்தலும் வன்புறை யழிதலும்
     வாய்மை கூறலு மன்னவன் மெய்யுரை
     தேறாது புலம்பலுங் காலமறைத் துரைத்தலுந்
     தூதுவர வுரைத்தலுந் தூதுகண் டழுங்கலு
     மெலிவு கண்டு செவிலி யுரைத்தலு
     மேவிய செவிலி கட்டுவைப் பித்தலுங்
     கலக்குற்று நிற்றலுங் கட்டுவித்தி கூறலும்
     வேலனை யழைத்தலு மின்ன லெய்தலும்
     விலக்க நினைத்தலு நிலைமை யுரைத்தலும்
     அறத்தொடு நிற்றலு மையந் தீர்த்தலும்
     அவன்வெறி விலக்கலுஞ் செவிலிக்குத் தோழி
     அறத்தொடு நிற்றலும் நற்றாய்க்குச் செவிலி