பொருளதிகாரம் | 348 | முத்துவீரியம் |
அறத்தொடு நிற்றலுந் தேர்வர
வுரைத்தலு
மணமுரசு கேட்டு மகிழ்ந்து ரைத்தலும்
ஐயுற்றுக் கலங்கலு மவனிதி
காட்டலும்
ஆறைந் துடனே கூறிய மூன்றும்
வரைபொருட் பிரிதலா மென்மனார்
புலவர்.
என்பது, முலைவிலை கூறல், வருமது
கூறி வரைவுடம் படுத்தல், வரை பொருட்
பிரிவை
யுரையெனக் கூறல், நீயே கூறென்றல்,
சொல்லாதேகல், பிரிந்தமை கூறல்,
நெஞ்சொடு
கூறல், நெஞ்சொடு வருந்தல், வருத்தங்
கண்டுரைத்தல், வழியொழுகி
வற்புறுத்தல்,
வன்புறை யெதிரழிந்திரங்கல், வாய்மை கூறி
வருத்தந் தணித்தல், தேறாது
புலம்பல்,
காலமறைத்துரைத்தல், தூது வரவுரைத்தல், தூது
கண்டழுங்கல், மெலிவு கண்டு
செவிலி கூறல்,
கட்டுவைப்பித்தல், கலக்கமுற்று நிற்றல்,
கட்டுவித்தி கூறல்,
வேலனை யழைத்தல்,
இன்னலெய்தல், வெறி விலக்குவிக்க
நினைத்தல், அறத்தொடு
நிற்றலை யுரைத்தல்,
அறத்தொடு நிற்றல், ஐயந்தீரக் கூறல், வெறி
விலக்கல்,
செவிலிக்குத் தோழியறத்தொடு
நிற்றல், நற்றாய்க்குச் செவிலி யறத்தொடு
நிற்றல்,
தேர்வரவு கூறல், மணமுரசு கேட்டு
மகிழ்ந்துரைத்தல், ஐயுற்றுக்கலங்கல்,
நிதிவரவு
கூறாநிற்றல் ஆகிய முப்பத்துமூன்றும்
வரைபொருட் பிரிதலாம்.
முலைவிலை கூறல்
என்பது, வரைவு முடுக்கப்பட்ட
தலைமகன் யான் வரைவொடு வருதற்கு நீ சென்று
அவள் ஐயன்மாரை முலைவிலை கேட்பாயாக வென,
எல்லாவற்றானு நின்வரைவை
யெமரேற்றுக்
கொளினல்லது விலை கூறுவராயின் அவளுக் கேழுலகும்
விலை
போதாதெனத், தோழி முலைவிலை கூறல்.
(வ-று.)
குறைவிற்கும் கல்விக்கும்
செல்விற்கும் நின்குலத் திற்கும்வந்தோர்
நிறைவிற்கும் மேதகு நீதிக்கும்
ஏற்பினல் லானினையின்
இறைவிற் குலாவரை யேந்திவண்
டில்லையன் ஏழ்பொழிலும்
உறைவிற் குலாநுத லாள்விலை
யோமெய்ம்மை ஓதுநர்க்கே. (திருக். 266)
வருமது கூறி வரைவுடம்படுத்தல்
என்பது, முலைவிலை கூறிய தோழி,
நீ வரைவொடு வாராது, இரவருள்
செய்யாநின்ற
விதுகெர்ப்பத்துக் கேதுவானால் நம்
|