பொருளதிகாரம் | 349 | முத்துவீரியம் |
மெல்லார்க்கும் பொல்லாதாம், அது
படாம லெமராற் றொடுக்கப் பட்ட வருங்கலங்களை
விரைய வரவிட்டு அவளை வரைந்தெய்துவா யாகவென,
மேல்வரு மிடுக்கண் கூறித்
தலைமகனை வரைவுடம்
படுத்தா நிற்றல்.
(வ-று.)
வடுத்தன நீள்வகிர்க் கண்ணிவெண்
ணித்தில வாணகைக்குத்
தொடுத்தன நீவிடுத் தெய்தத்
துணியென்னைத் தன்றொழும்பிற்
படுத்தநன் னீள்கழல் ஈசர்சிற்
றம்பலம் தாம்பணியார்க்
கடுத்தன தாம்வரிற் பொல்லா
திரவினின் ஆரருளே. (திருக். 267)
வரைபொருட் பிரிவை யுரையெனக்
கூறல்
என்பது, மேல்வருமது கூறி
வரைவுடம்படுத்தின தோழிக்கு, யான் போய்
நுமர் கூறு
நிதியமுந் தேடிக்கொண்டு, நும்மையும்
வந்து மேவுவேன், நீ சென்று அவள்
வாடாதவண்ணம்
யான் பிரிந்தமை கூறி யாற்றுவித்துக்கொண்
டிருப்பாயாக வெனத்
தலைமகன் றான்
வரைபொருட்குப் பிரிகின்றமை கூறாநிற்றல்.
(வ-று.)
குன்றங் கிடையுங் கடந்துமர் கூறும்
நிதிகொணர்ந்து
மின்றங் கிடைநும்மை யும்வந்து
மேவுவன் அம்பலஞ்சேர்
மன்றங் கிடைமரு தேகம்பம்
வாஞ்சியம் அன்னபொன்னைச்
சென்றங் கிடைகொண்டு வாடா
வகைசெப்பு தேமொழியே. (திருக், 268)
நீயே கூறென்றல்
என்பது, பிரிவறிவிப்பக் கூறின
தலைமகனுக்கு, நீ யிரவு வரினும் பகற்பிரிந்து
செல்வையென வுட்கொண்டு, நின்னோடு கூடிய
வப்பொழுதும் யானுயிர் வாழேனென்று
நினைந்திருப்பாளுக்குத், தாழேனென்னுமுரை
முன்னாக நின்பிரிவை நீயே சொல்லிப்
போவாயாகவென, அவன் விரைய வருவது காரணமாகத்
தோழி தலைமகள் பிரிவாற்றாமை
கூறா நிற்றல்.
(வ-று.)
கேழே வரையுமில் லோன்புலி
யூர்ப்பயில் கிள்ளையன்ன
யாழேர் மொழியாள் இரவரி
னும்பகற் சேறியென்று
|