பொருளதிகாரம் | 350 | முத்துவீரியம் |
வாழே னெனவிருக் கும்வரிக்
கண்ணியை நீவருட்டித்
தாழே னெனவிடைக் கட்சொல்லி யேகு
தனிவள்ளலே. (திருக். 269)
சொல்லாதேகல்
என்பது, நீயே கூறென்ற தோழிக்கு,
யானெவ்வாறு கூறினும் அவள்
பிரிவுடம்படா ளாதலி
னொருகாலும் வரைந்து கொள்கையில்லை, யான்
விரைய
வருவேன், அவ்வளவும் நீ யாற்று
வித்துக்கொண்டிருப்பாயாக வெனக் கூறித்
தலைமகன்
தலைமகளுக்குச் சொல்லாது பிரியா
நிற்றல்.
(வ-று.)
வருட்டிற் றிகைக்கும் வசிக்கிற்
றுளங்கும் மனமகிழ்ந்து
தெருட்டிற் றெளியலள் செப்பும்
வகையில்லை சீரருக்கன்
குருட்டிற் புகச்செற்ற கோன்புலி
யூர்குறு கார்மனம்போன்
றிருட்டிற் புரிகுழ லாட்கெங்ங
னேசொல்லி யேகுவனே. (திருக். 270)
(கு-ரை.) வருட்டின் திகைக்கும்
-நுதல், தோள் முதலாயின வற்றைத் தைவந்து
ஒன்று
உரைக்கின மயங்கும். வசிக்கின் துளங்கும் -
இன்சொல்லால் வசீகரப் படுத்தி
(தன்வயப்படுத்தி) பிரிவுரைப்பின் அது கண்டு
உள் நடுங்கும்.
பிரிந்தமை கூறல்
என்பது, தலைமகன் முன்னின்று
பிரிவுணர்த்த மாட்டாமையின் சொல்லாது
பிரியாநிற்பத், தோழி சென்று, நமராற்
றொடுக்கப்பட்ட வெல்லா நிதியத்தையு
மொருங்கு
வரவிட்டு நின்னை வரைந்து
கொள்வானாக அழற்கடநெறியே பொருள்தேடப்
போயினான்,
அப்போக்கு, அழற்கடஞ்
சென்றமையா னமக்குத் துன்பமென்பேனோ, வரைவு
காரணமாகப்
பிரிந்தானாதலின் நமக்கின்ப
மென்பேனோ வெனப், பொதுப்படக் கூறி, வரைவு
காரணமாகப் பிரிந்தானாதலினிது
நமக்கின்பமேயெனத், தலைமகள் வருந்தாம லவன்
பிரிந்தமை கூறல்.
(வ-று.)
நல்லாய் நமக்குற்ற தென்னென்
றுரைக்கேன் நமர்தொடுத்த
எல்லா நிதியும் உடன்விடுப்
பானிமை யோரிறைஞ்சும்
மல்லார் கழலழல் வண்ணர்வண்
டில்லை தொழார்களல்லாற்
செல்லா அழற்கடம் இன்றுசென்
றார்நம் சிறந்தவரே. (திருக். 271)
|