பொருளதிகாரம் | 351 | முத்துவீரியம் |
நெஞ்சொடு கூறல்
என்பது, பிரிந்தமை கூறக்கேட்டு
வருந்தாநின்ற நெஞ்சிற்கு, நமக் கேதம் பயக்கு
மொழுக்கமொழிந்து, குற்றந்தீர்ந்த
முறைமையாகிய வொழுக்கத்துப் பிரிந்தவிது,
நம்மைக்
கெடுக்குமென்று நீ கருதின் இதுவொழிய
நமக்கின்புற்று வாழு முபாயம்
வேறுளதோவெனத்,
தலைமகள் அந்நெஞ்சின் வருத்தந்தீரக்கூறல்.
(வ-று.)
அருந்தும் விடமணி யாமணி
கண்டன்மற் றண்டர்க்கெல்லாம்
மருந்தும் அமிர்தமும் ஆகுமுன்
னோன்றில்லை வாழ்த்தும்வள்ளல்
திருந்துங் கடனெறி செல்லுமிவ் வாறு
சிதைக்குமென்றால்
வருந்தும் மடநெஞ்ச மேயென்ன
யாமினி வாழ்வகையே. (திருக். 272)
நெஞ்சொடு வருந்தல்
என்பது, பிரிந்தமை கூறக் கேட்ட
தலைமகள், அன்றவரை விடாதென்னை
விட்டவர்
தேர்ப்பின் சென்ற நெஞ்சம், இன்று மவ்வாறு
செய்யாதென்னை
வருத்துகின்றதெனத்,
தன்னெஞ்சொடு வருந்தல்.
(வ-று.)
ஏர்ப்பின்னை தோண்முன்
மணந்தவன் ஏத்த எழிறிகழுஞ்
சீர்ப்பொன்னை வென்ற செறிகழ
லோன்றில்லைச் சூழ்பொழில்வாய்க்
கார்ப்புன்னை பொன்னவிழ் முத்த
மணலிற் கலந்தகன்றார்
தேர்ப்பின்னைச் சென்றவென்
னெஞ்சென் கொலாமின்று செய்கின்றதே.
(திருக்.
273)
வருத்தங்கண் டுரைத்தல்
என்பது, தலைமகன் நெஞ்சொடு
வருந்தக் கண்ட தோழி, இத்தன்மைத்தாகிய
வெற்பராகலிற் றாழாது விரைய வரைவொடு
வருவாராதலால் நீ யின்னாமையை
யடையாதொழிவாயாக வென்று, அவள்
வருத்தந்தீரக் கூறல்.
(வ-று.)
கானமர் குன்றர் செவியுற வாங்கு
கணைதுணையாம்
மானமர் நோக்கியர் நோக்கென
மானற் றொடைமடக்கும்
|