எழுத்ததிகாரம் | 36 | முத்துவீரியம் |
பாலாகிய ஐம்பாலையும்,
தன்மை முன்னிலை படர்க்கையாகிய மூவிடனையும்
பெறும்.
(வ-று.) அவன், அவள், அவர்
உயர்திணை. அது, அவை, அஃறிணை. நான்,
தன்மை.
நீ
முன்னிலை. அவன் படர்க்கை. (8)
மொழியின் வகை
123. மொழியே,
தனியிணை துணைபொது தணங்கணங் கலப்புறு
மொழியோ ரேழென
மொழிநரு முளரே.
(இ-ள்.) தனிமொழி,
இணைமொழி, துணைமொழி, பொதுமொழி, தணமொழி,
கணமொழி, கலப்புறுமொழி, ஏழென் றுரைப்பவரும்
சிலருளரா மெனவறிக.
(வ-று.) நிலம், நீர் இவை
பிரிக்கப்படாத தனிமொழி. தேரன், ஊரன் இவை
பிரிக்கப்படு மிணைமொழி. மூவர் வந்தார், அரசர்
கூடினார் இவை தொடர்ந்துவந்த
துணைமொழி. நங்கை, வேங்கை இவை இருபொருள் கொண்ட பொதுமொழி.
முனிவர்கள்,
தேவர்கள் இவை பன்மையைக் காட்டுங்
கணமொழி. இந்திரன், சந்திரன் இவை
யொருமையைக் காட்டுந் தணமொழி. ஆண், பெண் இவை இருதிணையிலுங்
கலந்து பொதுவாக
வந்த கலப்புறுமொழி. (9)
மொழிக்குரிய
எழுத்துவரையறை
124. மொழியே,
ஓரெழுத் தாதியொன் பானெழுத் தந்தமாம்.
(இ-ள்.) மொழி,
ஓரெழுத்துமுதலாக வொன்பதெழுத்திறுதியாகத்
தொடர்ந்துவருமென்க.
(வ-று.) கா, அணி, அறம்,
அகலம், அருப்பம், அம்பலவன், அரங்கத்தான்,
உத்திராடத்தான், உத்திரட்டாதியான்.
(வி-ரை.) நன்னூலார் ‘பகாப்பதம்
ஏழும் பகுபதம் ஒன்பதும், எழுத் தீறாகத்
தொடரும்’
என்பர். இவர் பகுபதம் பாகப்பதம் என்ற
பகுப்பின்றி இவ்வொன்பதையே
வரையறையாகக்
கொண்டுள்ளார். (10)
உயிரில் தமிழுக்கும்
வடமொழிக்கும் உரிய பொதுவெழுத்துக்கள்
125. இடையி னான்கு மீற்றி ரண்டும்
அல்லா வுயிர்பொது வாமென
மொழிப.
|