பக்கம் எண் :
 
பொருளதிகாரம்363முத்துவீரியம்

இருந்து திவண்டன வாலெரி முன்வலஞ் செய்திடப்பால்
அருந்துதி காணு மளவும் சிலம்பன் அருந்தழையே. (திருக். 300)

வழிபாடு கூறல்

என்பது, மணஞ் செய்தபின்னர் மணமனை காணவந்த செவிலிக்குக், காவலர் உடம்பு
முயிரும்போல வொருவரை யொருவர் இன்றியமையாமையா லிவள் கருத்தைக் கடவார்,
கமலங்கலந்த தேனுஞ் சந்தன மரமும்போல இயைந்திவள் கற்புவழியே
நிற்றலையுடையராய் இவள் வழியே நின்றொழுகா நின்றாரெனத், தோழி தலைமகன்
தலைமகள்வழி யொழுகா நின்றமை கூறல்.

(வ-று.)

சீரிய லாவியும் யாக்கையும் என்னச் சிறந்தமையால்
காரியல் வாட்கண்ணி யெண்ணக லார்கம லங்கலந்த
வேரியும் சந்தும் வியறந் தெனக்கற்பின் நிற்பரன்னே
காரியல் கண்டர்வண் டில்லை வணங்குமெங் காவலரே. (திருக். 301)

வாழ்க்கை நலங்கூறல்

என்பது, மணமனை கண்ட செவிலி மகிழ்வொடு சென்று, நின் மகளுடைய
இல்வாழ்க்கை நலத்துக்கு உவமைகூறில், நின்னுடைய இல்வாழ்க்கை நலமல்லது
வேறுவமை யில்லையென, நற்றாய்க்குத் தலைமகளது வாழ்க்கை நலங் கூறல்.

(வ-று.)

தொண்டினம் மேவுஞ் சுடர்க்கழ லோன்றில்லைத் தொன்னகரில்
கண்டின மேவுமில் நீயவள் நின்கொழு நன்செழுமென்
தண்டின மேவுதிண் டோளவன் யானவள் தற்பணிவோள்
வண்டின மேவுங் குழலாள் அயன்மன்னும் இவ்வயலே. (திருக். 302)

காதல் கட்டுரைத்தல்

என்பது, அவள் இல்வாழ்க்கை நலங்கிடக்க, அவன் அவள்மேல் வைத்த காதலான்
இவையேயன்றிப், பொறையாமென்று கருதி, நுதலின்க ணின்றியமையாத காப்பாகிய
பொட்டையு மணியான், இஃதவன் காதலெனத், தலைமகனது காதல்மிகுதி கூறல்.