பக்கம் எண் :
 
பொருளதிகாரம்364முத்துவீரியம்

(வ-று.)

பொட்டணி யானுதல் போயிறும் பொய்போல் இடையெனப்பூண்
இட்டணி யான்றவி சின்மல ரன்றி மிதிப்பக்கொடான்
மட்டணி வார்குழல் வையான் மலர்வண் டுறுதலஞ்சிக்
கட்டணி வார்சடை யோன்றில்லை போலிதன் காதலனே. (திருக். 303)

கற்பறிவித்தல்

என்பது, தலைமகனது காதல் மிகுதி கூறின செவிலி, அதுகிடக்க, அவளவனை
யொழிய வேறொரு தெய்வத்தைத் தெய்வமாகக் கருதாளாதலால், அவன் தன்னை
வணங்காத பகைவரைச் சென்று கிட்டித் திறை கொள்ளச் சென்றாலும், திறைகொண்டு வந்து,
அவளில்லத்தல்லது ஆண்டுத் தங்கியறியான், இஃதவரதியல்பெனக் கூறி, நற்றாய்க்குத்
தலைமகளது கற்பறிவித்தல்.

(வ-று.)

தெய்வம் பணிகழ லோன்றில்லைச் சிற்றம் பலமனையாள்
தெய்வம் பணிந்தறி யாளென்றும் நின்று திறைவழங்காத்
தெவ்வம் பணியச்சென் றாலுமன் வந்தன்றிச் சேர்ந்தறியான்
பௌவம் பணிமணி யன்னார் பரிசின்ன பான்மைகளே. (திருக். 304)

(கு-ரை.) திறை வழங்காத் தெவ்வம் - திறை கொடாத பகைவர். தெவ்வு - பகை;
ஈண்டுத் தெய்வம் என விரிந்து நின்றது.

கற்புப்பயப் புரைத்தல்

என்பது, கற்பறிவித்த செவிலி, அவள் அவனை யொழிய வணங்காமையின்,
அவனூருங் களிறும் வினைவயிற் சென்றால் அவ்வினை முடித்துக் கொடுத்துவந்து, தன்
பந்தியிடத்தல்லது ஆண்டுத் தங்காதாதலான், அவள் கற்பு அந்திக்காலத்து வடமீனையும்
வெல்லுமென, அவள் கற்புப் பயந்தமை நற்றாய்க்குக் கூறல்.

(வ-று.)

சிற்பந் திகழ்தரு திண்மதிற் றில்லைச்சிற் றம்பலத்துப்
பொற்பந்தி யன்ன சடையவன் பூவண மன்னபொன்னின்
கற்பந்தி வாய்வட மீனுங் கடக்கும் படிகடந்தும்
இற்பந்தி வாயன்றி வைகல்செல் லாதவன் ஈர்ங்களிறே. (திருக். 305)