பொருளதிகாரம் | 369 | முத்துவீரியம் |
28. பகைதணி
வினைப்பிரிவு
என்பது,
தம்மிற்பகைத்த வேந்தரைப் பகையைத் தணித்து
இருவரையும் பொருந்தச்
செய்தலாம்.
அதன் வகை
858. பிரிவு கூறலும் வருத்தந்
தணித்தலு
மிருபகை தணித்தற் கேக லென்ப.
என்பது, பிரிவுகூறல் வருத்தந்
தணித்தல் ஆகிய இரண்டும்
பகைதணிவினைப்பிரிவாம்.
பிரிவு கூறல்
என்பது, ஒருவரதுள்ள மிகுதியை ஒருவர்
தணித்தற்கரிதாகிய இருவேந்தர், தம்முட்
பகைத்துடன் மடியப்புகுதா நின்றாரெனக்கேட்டு,
அவ்விருவரையும் அடக்கவல்ல
திறலுடையராதலின்,
அவரைப் பகைதணித்து அவர் தம்மில் ஒன்றுபட
வேண்டி நின்னைப்
பிரியக் கருதா
நின்றாரெனத், தலைமகன் பகை தணிக்கப்
பிரியலுறா நின்றமை தோழி
தலைமகளுக்குக்
கூறல்.
(வ-று.)
மிகைதணித் தற்கரி தாமிரு
வேந்தர்வெம் போர்மிடைந்த
பகைதணித் தற்குப் படர்தலுற்
றார்நமர் பல்பிறவித்
தொகைதணித் தற்கென்னை
யாண்டுகொண் டோன்றில்லைச்
சூழ்பொழில்வாய்
முகைதணித் தற்கரி தாம்புரி
தாழ்தரு மொய்குழலே.
(திருக். 314)
வருத்தந் தணித்தல்
என்பது, தலைமகனது பிரிவுகேட்டு,
உள்ளுடைந்து, தனிமையுற்று வருந்துகின்ற
தலைமகளை, நின்னைவிட்டு அவர் பிரியார், நீ
நெருப்பையுற்ற வெண்ணெயும், நீரையுற்ற
உப்பும்போல இவ்வாறுருகித் தனிமையுற்று
வருந்தா தொழியெனத், தோழி அவளது
வருத்தந்
தணித்தல்.
(வ-று.)
நெருப்புறு வெண்ணெயும் நீருறும்
உப்பும் எனவிங்ஙனே
பொருப்புறு தோகை புலம்புறல்
பொய்யன்பர் போக்குமிக்க
|