பொருளதிகாரம் | 370 | முத்துவீரியம் |
விருப்புறு வோரைவிண் ணோரின்
மிகுத்துநண் ணர்கழியத்
திருப்புறு சூலத்தி னோன்றில்லை
போலுந் திருநுதலே. (திருக். 315) (6)
பகைதணிவினைப்பிரிவு முற்றும்.
29. வேந்தற்
குற்றுழிப்பிரிவு
என்பது, ஒரு வேந்தனுக்கு ஒரு
வேந்தன் தொலைந்து வந்தடைந்தால் அவனுக்கு
உதவிசெய்யப் பிரியா நிற்றல்.
அதன் வகை
859. பிரிந்தமை கூறலும் பிரிவாற்
றாமை
கார்மிசை வைத்தலுங் காரை
நோக்கி
வருந்தி யுரைத்தலு மலர்க்குழ லரிவை
கூதிர்கண்டு கவறலுங் குளிர்முன்
பனிக்கவள்
நொந்து கூறலு நோக்கிப்
பின்பனிக்
கிரங்கி யுரைத்தலு மிளவேனில்
கண்டவள்
இன்ன லெய்தலு மிதுவவர் குறித்த
பருவ மாமென வரவு கூறலும்
பருவமறைத் துரைத்தலு மறுத்துரை
செய்யலுந்
தேர்வரவு கூறலும் வினைமுற்றி
நினைதலும்
நிலைமைநினைந் துரைத்தலு முகிலொடு
கூறலும்
வரவெடுத் துரைத்தலு மறவாமை கூறலும்
மற்றிவை யீரெட்டு முற்றுழிப்
பிரிவே.
என்பது, பிரிந்தமை கூறல்,
பிரிவாற்றாமை கார்மிசை வைத்தல்,
வானோக்கி
வருந்தல், கூதிர்கண்டு கவறல்,
முன்பனிக்கு நொந்துரைத்தல், பின்பனி
நினைந்திரங்கல்,
இளவேனில் கண்டின்ன
லெய்தல், பருவங் காட்டி வற்புறுத்தல்,
பருவமன்றென்று கூறல்,
மறுத்துக் கூறல், தேர்வரவு
கூறல், வினைமுற்றி நினைதல், நிலைமை நினைந்து
கூறல்,
முகிலொடு கூறல், வரவெடுத்துரைத்தல்,
மறவாமை கூறல் ஆகிய பதினாறும்
வேந்தற்குற்றுழிப் பிரிவாம்.
|