பக்கம் எண் :
 
பொருளதிகாரம்380முத்துவீரியம்

(வ-று.)

சுருடரு செஞ்சடை வெண்சுட ரம்பல வன்மலயத்
திருடரு பூம்பொழில் இன்னுயிர் போலக் கலந்திசைத்த
அருடரு மின்சொற்க ளத்தனை யும்மறந் தத்தஞ்சென்றோ
பொருடரக் கிற்கின் றதுவினை யேற்குப் புரவலரே. (திருக். 336)

பொருத்த மறிந்துரைத்தல்

என்பது, திணைபெயர்த்துக் கூறின தலைமகளுக்கு, யாம் எல்லாஞ்
சொன்னோமாயினும், காதலர்க்கு நினைவு பொருண் மேலாயிருந்தது, 
இனி யானுரைப்பதென்னோ வெனத், தோழிதலை மகனது பொருத்த மறிந்து அதற்குத்
தானொந்து கூறல்.

(வ-று.)

மூவர்நின் றேத்த முதலவன் ஆடமுப் பத்துமும்மைத்
தேவர்சென் றேத்துஞ் சிவன்றில்லை யம்பலஞ் சீர்வழுத்தாப்
பாவர்சென் றல்கும் நரக மனைய புனையழற்கான்
போவர்நங் காதலர் என்னாம் உரைப்பது பூங்கொடியே. (திருக். 337)

பிரிந்தமை கூறல்

என்பது, பொதுவகையா னுணர்த்தினேமாயின், இனித்தீயது பிற்காண்கின்றோமெனத்
தலைமகனுணர்த்தாது பிரியா நிற்ப, நின்முன்னின்று பிரிவுணர்த்தினால் நீமேனியொளி
வாடுவையென உட்கொண்டு பொருள் முடித்துக் கடிதின் மீள்வாராக நால்வகைத்
தானையோடு நம் மன்னர் வினைவயிற் சென்றாரெனத், தோழி தலைமகளுக்குத்
தலைமகன் பிரிந்தமை கூறா நிற்றல்.

(வ-று.)

தென்மாத் திசைவசை தீர்தரத் தில்லைச்சிற் றம்பலத்துள்
என்மாத் தலைக்கழல் வைத்தெரி யாடும் இறைதிகழும்
பொன்மாப் புரிசைப் பொழிற்றிருப் பூவண மன்னபொன்னே
வன்மாக் களிற்றொடு சென்றனர் இன்றுநம் மன்னவரே. (திருக். 338)

இரவுறு துயரத்திற் கிரங்கியுரைத்தல்

என்பது, பிரிவு கேட்ட தலைமகளதாற்றா முகங்கண்ட தோழி, இவ்வுறுப்புக்
குறையோடெங்குந் திரிந்திளைத்து அருக்கன்தேர்