பக்கம் எண் :
 
பொருளதிகாரம்387முத்துவீரியம்

    வாயில் பெறாது மகன்றிற நினைதலும்
    வாயிற் கணின்று தோழிக் குரைத்தலும்
    வாயில் வேண்டத் தோழி கூறலும்
    மன்னிய தோழி வாயில் வேண்டலு
    மனையவர் மகிழ்தலும் வாயின் மறுத்தலும்
    பாணனொடு வெகுடலும் பாணன் புலத்தலும்
    விருந்தொடு செல்லத் தணிந்தமை கூறலும்
    ஊடறணி வித்தலு மணைந்தவழி யூடலும்
    புனலாட்டு வித்தமை கூறிப் புலத்தலுங்
    கலவி கருதிப் புலவி யியம்பலு
    மிகுத்துரைத் தூடலும் விறல்வேற் காளை
    ஊட னீட வாடி யுரைத்தலும்
    துனியொழிந் துரைத்தலுந் துகளொன் றில்லாப்
    புதல்வன் மேல்வைத்துப் புலவி தீர்தலுங்
    கலவியிடத் தூடலு முன்னிகழ் வியம்பலும்
    பரத்தையைக் கண்டமை பயன்படக் கூறலும்
    ஊதிய மெடுத்துரைத் தூடறீர்த்தலும்
    எண்ணா றொன்றிவை பரத்தையிற் பிரிவெனப்
    பண்ணார் மொழியாய் பகர்ந்திசி னோரே.

என்பது, கண்டவர்கூறல், பொறையுவந்துரைத்தல், பொதுப்படக் கூறி
வாடியழுங்கல், கனவிழந்துரைத்தல், விளக்கொடு வெறுத்தல், வாரம் பகர்ந்து வாயின்
மறுத்துரைத்தல், பள்ளியிடத் தூடல், செவ்வணி விடுக்க வில்லோர் கூறல், அயலறி
வுரைத்தவ ளழுக்க மெய்தல், செவ்வணிகண்ட வாயிலவர் கூறல், மனைபுகல்கண்ட
வாயிலவர் கூறல், முகமலர்ச்சி கூறல், காலநிகழ்வுரைத்தல், எய்த லெடுத்துரைத்தல்,
கலவி கருதிப்புலத்தல், குறிப்பறிந்து புலந்தமை கூறல், வாயிலவர் வாழ்த்தல், 
புனல்வர வுரைத்தல், தேர்வரவுகண்டு மகிழ்ந்து கூறல், புனல் விளையாட்டிற்
றம்முளுரைத்தல், தன்னை வியந்துரைத்தல், நகைத்துரைத்தல், நாணுதல் கண்டு
மிகுத்துரைத்தல், பாணன் வரவுரைத்தல், தோழி இயற்பழித்தல், உழைய ரியற்பழித்தல்,
இயற்பட மொழிதல், நினைந்து வியந்துரைத்தல், வாயில் பெறாது மகன்றிற நினைதல்,
வாயிற்கணின்று தோழிக்குரைத்தல், வாயில் வேண்டத் தோழி கூறல், தோழி வாயில்
வேண்டல், மனையவர் மகிழ்தல், வாயின் மறுத்துரைத்தல், பாணனொடு வெகுடல்,
பாணன் புலந்துரைத்தல், விருந்தொடு செல்லத் தணிந்தமை