பக்கம் எண் :
 
பொருளதிகாரம்388முத்துவீரியம்

கூறல், ஊட றணிவித்தல், அணைந்தவழியூடல், புனலாட்டு வித்தமை கூறிப் புலத்தல்,
கலவி கருதிப் புலத்தல், மிகுத்துரைத்தூடல், ஊடனீடவாடி யுரைத்தல், துனி
யொழிந்துரைத்தல், புதல்வன்மேல் வைத்துப் புலவி தீர்தல், கலவியிடத் தூடல்,
முன்னிகழ் வுரைத்தூடல் தீர்த்தல், பரத்தையைக் கண்டமை கூறிப்புலத்தல், ஊதிய
மெடுத்துரைத் தூடல் தீர்த்தல் ஆகிய நாற்பத்தொன்பதும் பரத்தையிற் பிரிவாம்.
அவற்றுள்,

கண்டவர் கூறல்

என்பது, தலைமகன் பரத்தையர் சேரிக்கட் செல்லா நிற்ப, அப்பரத்தையர்
அவனை யொருங்கு எதிர்கொண்டு சுற்றும் பற்றிப் போர் செய்யா நின்றமையின் இஃது
இவன் காதலி மாட்டு என்னா மென, அவ்விடத்துக் கண்டவர் தம்முட் கூறாநிற்றல்.

(வ-று.)

உடுத்தணி வாளர வன்றில்லை யூரன் வரவொருங்கே
எடுத்தணி கையே றினவளை யார்ப்ப இளமயிலேர்
கடுத்தணி காமர் கரும்புரு வச்சிலை கண்மலரம்
படுத்தணி வாளிளை யோர்சுற்றும் பற்றினர் மாதிரமே. (திருக். 352)

பொறையுவந்துரைத்தல்

என்பது, தலைமகனைப் பரத்தையர் எதிர்கொண்டமை கேட்ட தலைமகள்,
நெஞ்சுடைந்து, புறத்து வெளிப்படாமற் பொறுத்தமை கண்ட தோழி, யான் இவ்வாறாகவுங்
கலங்காது நின்ற பெரும் பொறையாட்டியை யானின்று பேசுவன வென்னென்று, அவளை
உவந்து கூறா நிற்றல்.

(வ-று.)

சுரும்புறு கொன்றையன் தொல்புலி யூர்ச்சுருங் கும்மருங்குல்
பெரும்பொறை யாட்டியை யென்னின்று பேசுவ பேரொலிநீர்க்
கரும்புறை யூரன் கலந்தகன் றானென்று கண்மணியும்
அரும்பொறை யாகுமென் ஆவியும் தேய்வுற் றழிகின்றதே. (திருக். 353)

பொதுப்படக் கூறி வாடியழுங்கல்

என்பது, பொறை யுவந்துரைத்த தோழிக்கு, முன்னிலைப் புறமொழியாகத், தமது
நலங்கவரக் கொடுத்து, வேறு துணை