எழுத்ததிகாரம் | 40 | முத்துவீரியம் |
(இ-ள்.) லகரமெய்க்கு இ, உ
ஆகிய விரண்டு குற்றெழுத்துக்களி லொன்று மொழிக்கு
முதலாகி முன்னர்ப்போதரும்.
(வ-று.) இலாபம், உலோபம்.
(24)
யகரம் மொழிக்கு
முதலாகுமாறு
139. யகரக் கிகரமு
மாகிமுன் வருமே.
(இ-ள்.) யகரமெய்க்கு
இகரம் மொழிக்கு முதலாகி முன்னர்ப் போதரும்.
(வ-று.) இயக்கன். (25)
(வி-ரை.) 137 ஆம் நூற்பா
முதல் இந்நூற்பா வரையுள்ள கருத்துக்கள்.
‘‘ரவ்விற் கம்முத
லாமுக் குறிலும்
லவ்விற் கிம்முத லிரண்டும் யவ்விற்
கிய்யு மொழிமுத லாகிமுன்
வருமே’’
எனவரும் (நன்னூல் - பதவி -
21) நன்னூலார் கூற்றோடு ஒத்து நிற்கின்றன.
ஈரெழுத்திணைந்து
வருங்கால் வரும் முறைமை
140. இணைந்தியல் காலை யரலக் கிகரமும்
மவ்வக் குகரமு நகரக் ககரமும்
மிசைவரும் ரவ்வழி யுவ்வு
மாம்பிற.1
(இ-ள்.) ஆரியமொழியுள்
இரண்டெழுத்து இணைந்து ஓரெழுத்தைப்போல்
நடக்குங்காலைப் பின்னின்ற, ய, ர, லக்களுக்கு
இகரமும், ம, வக்களுக்கு உகரமும்,
நகரத்திற்கு,
அகரமும் மேலே வரும். ரகரத்திற்கு உகரமும் வரும்.
(வ-று.) வாக்கியம்,
வக்கிரம், சுக்கிலம்; பதுமம், பக்குவம்; அரதநம்,
அருத்தம். (26)
சொல்லின் வகை
141. சங்கதம் பாகதஞ்
சநுக்கிர கம்மவப்
பிரஞ்சன நான்கெனப்
பேசுங் கிளவி.
1. நன்-பதவியல்-22.
|