பக்கம் எண் :
 
பொருளதிகாரம்402முத்துவீரியம்

விருந்தொடுசெல்லத் துணிந்தமை கூறல்

என்பது, வாயில்பெறாது பாணன் புலந்து நீங்க, யாவருக்கும் வாயினேராது
வெகுண்டுரைத்தல், தழல்சுவல்போல் மிளிர்ந்து முத்தம் பயக்கும் இவளுடைய கண்கள்,
விருந்தொடு வந்தானென்று உரைக்கு மளவிற் பண்டை நிறமாகிய கருங்குவளையது
செவ்விபரந்த, என்ன மனையறக் கிழத்தியோவென இல்லோர் தம்முட் கூறல்.

(வ-று.)

மத்தக் கரியுரி யோன்றில்லை யூரன் வரவெனலும்
தத்தைக் கிளவி முகத்தா மரைத்தழல் வேள்மிளிர்ந்து
முத்தம் பயக்குங் கழுநீர் விருந்தொடென் னாதமுன்னம்
சித்தக் கருங்குவ ளைச்செவ்வி யோடிக் கெழுமினவே. (திருக். 388)

ஊடறணிவித்தல்

என்பது, விருந்தேற்றுக் கொண்ட தலைமகளுழைச் சென்று நம்முடைய
தோன்றலைத் தனக்குத் துணையாகக் கொண்டுவந்து தோன்றலால் நினதுளகத்துக் கவற்சியை
யொழிந்தினி நம்மரசற் குக்குற்றேவல் செய்வாயாகவெனத், தோழி அவனை
ஊடறணிவியா நிற்றல்.

(வ-று.)

கவலங்கொள் பேய்த்தொகை பாய்தரக் காட்டிடை யாட்டுவந்த
தவலங் கிலச்சிவன் தில்லையன் னாய்தழு விம்முழுவிச்
சுவலங் கிருந்தநந் தோன்றற் றுணையெனத் தோன்றுதலால்
அவலங் களைந்து பணிசெயற் பாலை அரசனுக்கே. (திருக். 389)

அணைந்தவழி யூடல்

என்பது, தோழியாலூட றணிவிக்கப்பட்டுப் பள்ளியிடத்தாளாகிய தலைமகள்,
நீசெய்கின்ற, விதனை யறியில்நின் காதலிமார் நின்னை வெகுள்வர், அதுகிடக்க, யாம்
மேனி முழுதும் சிறுவனால் உண்டாக்கப்பட்ட பால் புலப்படுந் தன்மை யுடையேம், அதன்
மேல் யாமும் நீ செய்கின்ற இக் கள்ளத்தை விரும்பேம், அதனால் எங் காலைத்
தொடாதொழி எங் கையை விடுவாயாக வெனத், தலைமகன் தன்னை யணைந்தவழி
யூடல்.