பொருளதிகாரம் | 403 | முத்துவீரியம் |
(வ-று.)
சேறான் திகழ்வயற்
சிற்றம் பலவர்தில் லைநகர்வாய்
வேறான் திகழ்கண் ணிளையார் வெகுள்வர்மெய்ப்
பாலன்செய்த
பாறான் திகழும் பரிசினம் மேவும் படிறுவவேம்
காறான் தொடறொட ரேல்விடு தீண்டலெங் கைத்தலமே.
(திருக். 390)
புனலாட்டுவித்தமை கூறிப்புலத்தல்
என்பது, அணைந்தவழி யூடாநின்ற
தலைமகளூட றீராநின்ற தலைமகனோடிவர்
செய்த
பிழை யெல்லாம் பொறுக்கலாம் பலருமறிய
வொருத்தியைப் புனலாட்டுவித்து
அது செய்யாதார்போல வென்மனையின்கணிவர் வந்து
நிற்கின்ற விஃதெனக்குப்
பொறுத்தலரிதெனத் தணிக்கத் தணியாது பரத்தையைப்
புனலாட்டு வித்தமை கூறிப்
புலத்தல்.
(வ-று.)
செந்தார் நறுங்கொன்றைச்
சிற்றம் பலவர்தில் லைநகரோர்
பந்தார் விரலியைப் பாய்புன
லாட்டிமன் பாவியெற்கு
வந்தார் பரிசுமன் றாய்நிற்கு
மாறென் வளமனையிற்
கொந்தார் தடந்தோள் விடங்கா
லயிற்படைக் கொற்றவரே. (திருக். 391)
கலவிகருதிப் புலத்தல்
என்பது, புனலாட்டு வித்தமை
கூறிப் புலவாநின்ற தலைமகள், ஊடறீர்க்க
நுதலுந்
தோளு முதலாயினவற்றைத் தைவந்து வருடித் தலையளி
செய்யாநின்ற தலைமகனோ
டெம்முடைய
சிறிய வில்லின்கண் வந்தன்று நீயிர்செய்த
தலையளி யெங்கட்கன்று
வேண்டுதுமாயினும் இன்று உமது திருவளெங்கட்கு நீயிர்
வந்த வித்துணையு மமையும்,
வேறு நீயிர் தலையளி செய்ய வேண்டுவதில்லையெனக்,
கலவிகருதிப் புலத்தல்.
(வ-று.)
மின்றுன் னியசெஞ்
சடைவெண் மதியன் விதியுடையோர்
சென்றுன் னியகழற் சிற்றம் பலவன்றென் னம்பொதியில்
நன்றுஞ் சிறியவ ரில்லெம தில்லநல் லூரமன்னோ
இன்றுன் திருவருள் இத்துணை சாலுமன்
எங்களுக்கே. (திருக். 392)
|