பொருளதிகாரம் | 404 | முத்துவீரியம் |
மிகுத்துரைத்தூடல்
என்பது, கலவி கருதிப் புலவாநின்ற
தலைமகள், புணர்தல் உறாநின்ற தலைமகனுட
னீர்விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுமிய
குடியிலுள்ளீர், எம்போல்வா
ரிடத்திவ்வாறு புணர்தல் விரும்புதலுமக்கு விழுமிய
வல்லவென, மிகுத்துரைத்தூடல்.
(வ-று.)
செழுமிய மாளிகைச்
சிற்றம் பலவர்சென் றன்பர்சிந்தைக்
கழுமிய கூத்தர் கடிபொழி லேழினும் வாழியரோ
விழுமிய நாட்டு விழுமிய நல்லூர் விழுக்குடியீர்
விழுமிய அல்லகொல் லோவின்ன வாறு
விரும்புவதே. (திருக். 393)
ஊடனீடவாடியுரைத்தல்
என்பது, தணிக்கத் தணியாது
மிகுத்துரைத்துத் தலைமகள் மேன்மேலு மூடா நிற்ப,
அன்றம் மலையிடத்துத் தன்னையெய்து
தற்கோ ருபாய மின்றி வருந்தாநிற்ப, யானுய்யும்
வண்ணந் தன்னிணைமலர்க்கண்ணின
தினிய நோக்கத்தைத் தந்தருளியென்னைத் தன்
வயமாக்கிய நம் பெண்ணமுத மதுவன்று, இது நம்மை
வருத்துவதோர் மாயமாமெனத்
தன்னெஞ்சிற்
கியம்பி யூடனீடத் தலைமகன் வாடல்.
(வ-று.)
திருந்தேன் உயநின்ற சிற்றம்
பலவர்தென் னம்பொதியில்
இருந்தேன் உயவந் திணைமலர்க்
கண்ணினின் நோக்கருளிப்
பெருந்தே னெனநெஞ் சுகப்பிடித்
தாண்டநம் பெண்ணமிழ்தம்
வருந்தேல் அதுவன் றிதுவோ
வருவதோர் வஞ்சனையே. (திருக். 394)
துனியொழிந்துரைத்தல்
என்பது, ஊடனீடலால் தலைமகன்
தாற்றாவாயில் கண்ட தலைமகள், அன்று
நங்குன்றிடத்து மிக்க விருளின்கண்ணே
அரிதிரண்டு யானை வேட்டஞ் செய்யு மதரகத்துத்
தமது வேலே துணையாக வந்தியல்பைப் பொருந்திய
வன்பை நமக்குத் தந்தவர்க்கின்று
நாமுடம்படாது நிற்குமிந்நிலைமை
யென்னாமெனத், துனியொழிந்தவனோடு
புணர்ச்சிக்
குடம்படாது நிற்றல்.
|