பக்கம் எண் :
 
யாப்பதிகாரம்414முத்துவீரியம்

னலகில் சோதிய னம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்திவ ணங்குவாம். (பெரியபு-1) (17)

நெடிலடி

879. ஐஞ்சீ ரான்வரு வதுநெடி லடியே.

என்பது, அடிகடோறும் ஐந்து சீராகவருவது நெடிலடியாகும்.

(வ-று.)

ஒழுகு தீம்புனற் சிறைசெயு மோதையு முழுநர்
குழுவின் சும்மையு முழத்தியர் குரவை யினார்ப்புங்
கழனி வாழ்கென வான்முளை வித்துநர் கலிப்பு
மழைமுழக்கொடு மாறுகொண் டொலித்தன மாதோ. (18)

கழி நெடிலடி

880. அறுசீர் முதலை யிருசீ ரடிகடை
     யாக வருவது கழிநெடி லாகும்.

என்பது, ஆறுசீர் முதலாகப் பதின்சீ ரிறுதியாகவருவது, கழிநெடிலடியாகும்.

(வ-று.)

பூவாய் நெடுங்கோட் டுறுபசுந்தேன் கை கான் முடங்கு பொறியிலிதன்
நாவா யெழுகிற் றெனவுலக மளந்த மாலு நான்முகனுங்
காவா யெனநின் றேத்தெடுப்பத் தானே வந்தென் கரதலத்தின்
மேவா வமர்ந்த மாமணியைத் தொழுது வினைக்கு விடைகொடுப்பாம்.
                                                                                                   (பிரபுலிங்க லீலை)

பிறவும் வந்துழிக்காண்க. (19)

வெண்பாவிற்குரிய அடிச் சிறுமை

881. வெள்ளைக் கிரண்டடி சிறுமை யாகும்.

என்பது, வெண்பாவிற்கு இரண்டடி சிறுமையாகும்.

(வ-று.)

புறங்குன்றி கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற்கரியா ருடைத்து. (குறள்-277) (20)