பக்கம் எண் :
 
யாப்பதிகாரம்413முத்துவீரியம்

ஓரசைச்சீர்கள் தளை கொள்ளுமாறு

875. அகவற் சீரற் றாகுமோ ரசைச்சீர்

என்பது, நாள்முன்னர் நேரசைவரின், நேரொன்றிய அகவற்றளை, நிரையசைவரின்,
இயற்சீர்வெண்டளை, மலர்முன்னர் நிரையசைவரின் நிரையொன்றிய அகவற்றளை,
நேரசைவரின் இயற்சீர் வெண்டளையாகும்.

(வ-று.) வந்துழிக் காண்க. (14)

குறளடி

876. இருசீ ரான்வரல் குறளடி யெனலே.

என்பது, அடிகள்தோறும் இரண்டு சீராகவருவது குறளடியாகும்.

(வ-று.)

திரைத்த சாலிகை, நிரைத்த போனிரந்,
திரைப்ப தேன்களே, விரைக்கொண் மாலையாய். (15)

சிந்தடி

877. முச்சீ ரான்முடி வதுசிந் தடியே

என்பது, அடிகள்தோறும் மூன்று சீராகவருவது சிந்தடியாகும்,

(வ-று.)

இருது வேற்றுமை யின்மையாற்
சுருதி மேற்றுறக் கத்தினோ
டரிது வேற்றுமை யாகவே
கருது வேற்றடக் கையினாய். (16)

அளவடி

878. நாற்சீ ரான்வரல் அளவடி யாகும்.

என்பது, அடிகடோறு நான்குசீராகவருவது அளவடியாகும்.

(வ-று.)

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவ
னிலவு லாவிய நீர்மலி வேணிய