யாப்பதிகாரம் | 412 | முத்துவீரியம் |
(வ-று.)
அணிநிழல சோகமர்ந் தருணெறி
நடாத்திய
மணிதிக ழவிரொளி வரதனைப்
பணிபவர் பவநனி பரிசறுப் பவரே. (10)
வஞ்சித்தளைகள்
872. கனிமுன் னேரொன் றாதவஞ்
சித்தளை
ஒன்றிய தளைநிரை வரினா கும்மே.
என்பது, கனிக்குமுன்நேர் வருவது
ஒன்றாத வஞ்சித்தளை, நிரைவருவது ஒன்றிய
வஞ்சித்தளை.
(வ-று.)
பூந்தாமரைப் போதலமரத்
தேம்புனலிடை மீன்றிரிதரும்
வளவயலிடைக் களவயின்மகிழ். (11)
கலித்தளை
873. காய்முன் னிரைவரிற் கலித்தளை
யாகும்.
என்பது, காய்க்கு முன்னர்
நிரைவருவது கலித்தளை.
(வ-று.)
செல்வப்போர்க் கதக்கண்ணன்
செயிர்த்தெறிந்த சினவாளி
‘‘முல்லைத்தார் மறமன்னர்
முடித்தலையை முருக்கிப்போ
யெல்லைநீர் வியன்கொண்மூவிடை
நுழையு மதியம்போன்
மல்லலோங் கெழில்யானை
மருமம்பாய்ந் தொளித்ததே. (12)
பொதுச்சீர்கள் தளைகொள்ளுமாறு
874. பொதுச்சீர்ப் பூக்கா யாகு
நிழல்கனி
ஆகு மென்றா ரறிந்திசி னோரே.
என்பது, பூவிற்குமுன்னர்
நேரசைவரின் வெண்சீர் வெண்டளை - நிரையசைவரிற்
கலித்தளை - நிழலிற்குமுன்னர் -
நிரையசை வரினொன்றிய வஞ்சித்தளை நேரசைவரின்
ஒன்றாத வஞ்சித் தளையாகும். (13)
|