பக்கம் எண் :
 
யாப்பதிகாரம்411முத்துவீரியம்

என்பது, நேரசை தனித்துநின்று நாள் எனவும், நிரையசை தனித்து நின்று மலர்
எனவும், சீராகும்.

(வ-று.)

பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
வாலெயி றூறிய நீர். (குறள்-1521)

நன்றறி வாரிற் கயவர் திருவுடையர்
நெஞ்சத் தவல மிலர். (குறள்-1072) (8)

வெண்சீர் வெண்டளையும் இயற்சீர் வெண்டளையும்

870. காய்முன் னேரே வெண்சீர் வெண்டளை
     மாமுன் னிரையும் விளமுன் னேரும்
     இயற்சீர் வெண்டளை யென்மனார் புலவர்.

என்பது, காய்முன் நேர்வருவது வெண்சீர்வெண்டளை.

(வ-று.)

யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. (குறள். 367)

மாமுன் னிரையும் விளமுன் னேரும்
இயற்சீர் வெண்டளை.

(வ-று.)

பாலொடு தேன்கலந் தற்றே பனிமொழி
வாலெயி றூறிய நீர். (குறள்-1121) (9)

நேரொன்றாசிரியத் தளையும் நிரையொன்றாசிரியத் தளையும்

871. மாமுன் னேர் நேரொன்றிய வகவற்
     றளையாம் விளமுன் னிரைநிரை யொன்றிய
     அகவற் றளையா மாயுங் காலே.

என்பது, மாமுன்நேர்வருவது நேரொன்றிய அகவற்றளை.

(வ-று.)

போது சாந்தம் பொற்ப வேந்தி
யாதி நாதற் சேர்வோர்
சோதி வானந் துன்னு வோரே.

விளமுன் னிரைவருவது நிரையொன்றிய வகவற்றளை