பக்கம் எண் :
 
யாப்பதிகாரம்420முத்துவீரியம்

அன்னம் பயிலிய தாமரை அன்ன

ஒரூஉவெதுகை

குவிந்து சுணங் கரும்பிய கொங்கை விரிந்து

ஒரூஉமுரண்

காஅய்ச் செந்நெல் கறித்துப் போஒய்

ஓரூஉவளபு (35)

கூழைத் தொடை

897. இறுதிச் சீரொழித் தெல்லாந் தொடுப்பது
     கூழை யென்மனார் குறிப்புணர்ந் தோரே.

என்பது, ஈற்றுச் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணு மோனை முதலாயின
ஐந்தும் வருவது கூழைத்தொடை.

(வ-று.)

அகன்ற அல்குல் அந்நுண் மருங்குல்

கூழைமோனை

மாதர் நகிலே வல்லே யியலே

கூழையியைபு

நன்னிற மென்முலை மின்னிடை வருத்தி

கூழையெதுகை

சிறிய பெரிய நிகர்மலர்க் கோதை

கூழைமுரண்

மாஅத் தாஅண் மோஒட் டெருமை

கூழையளபு (36)

மேற்கதுவாய்த் தொடை

898. முதலயற் சீரொழித் தேனைய சீரெலா
     மியையத் தொடுப்பது மேற்கது வாயே.

என்பது, முதலயற் சீர்க்கணின்றி ஒழிந்த மூன்று சீர்க்கண்ணு மோனை முதலாயின
ஐந்தும் வருவது மேற்கதுவாய்த்தொடை.