யாப்பதிகாரம் | 422 | முத்துவீரியம் |
என்பது, நாற்சீர்க்கண்ணும்
மோனைமுதலாயின ஐந்தும் வருவது முற்றுத்தொடை.
(வ-று.)
அயில்வேல் அனுக்கி அம்பலத்து
அமர்ந்த
முற்றுமோனை
புயலே குழலே மயிலே யியலே
முற்றியைபு
கன்னியம் புன்னை யின்னிழற்
றுன்னிய
முற்றெதுகை
துவர்வாய்த் தீஞ்சொலு முவந்தெனை
முனியா
முற்றுமுரண்
ஏஎ ராஅ னீஇ ரூஉரன்
முற்றளபு (39)
உறுப்பியன் முற்றும்.
2. செய்யுளியல்
வெண்பாவடிக்குரிய
சீர்வரையறை
601. வெண்பா வளவடி வேண்டப்
படுமே.
என்பது,
வெண்பாவெல்லாம் ஓரடி நாற்சீரான்
வரப்பெறும்.
(வ-று.)
நுனிக்கொம்ப ரேறினா ரஃதிறந்
தூக்கி
னுயிர்க்கிறுதி யாகி விடும். (1)
குறள் வெண்பா
902. அவற்றுள்,
உரத்தெழு செப்ப லோசையைத்
தழுவி
யிரண்டடி யாயீற் றடிமுச் சீரா
யொருவிகற் பானு மிருவிகிற் பானும்
வருவது குறள்வெண் பாவெனப் படுமே.
|