பக்கம் எண் :
 
யாப்பதிகாரம்423முத்துவீரியம்

என்பது, முற்கூறியவற்றுள் குறள்வெண்பா உரத்தினின்றெழுகின்ற
செப்பலோசையைத் தழுவி இரண்டடியாய் ஈற்றடி முச்சீராய் ஒரு விகற்பானும்
இருவிகற்பானும் வருவது.

(வ-று.)

கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவ
னற்றா டொழாஅ ரெனின். (குறள்-2)

ஒருவிகற்பு.

யாதானு நாடாமா லூராமா லென்னொருவன்
சாந்துணையுங் கல்லாத வாறு. (குறள்-397)

இருவிகற்பு. (2)

நேரிசை வெண்பா

903. இடையிற் றனிச்சொற் பெற்றிரு குறளா
யொருவிகற் பானு மிருவிகற் பானும்
வருவது நேரிசை வெண்பா வாகும்.

என்பது, இரண்டு குறள்வெண்பாவாக நடுவிற்றனிச் சொற்பெற்று ஒரு விகற்பானும்
இருவிகற்பானும் வருவது நேரிசை வெண்பாவாகும்.

(வ-று.)

திருமுடியிற் கண்ணியு மாலையும் பாம்பு
திருமார்பி லாரமும் பாம்பு, பெருமான்,
றிருவரையிற் கட்டிய கச்சையும் பாம்பு
பொருபுயத்திற் கங்கணமும் பாம்பு. (சி. செ. கோவை)

ஒருவிகற்பு.

நீல மணிமிடற்ற னீண்ட சடைமுடிய
னூலணிந்த மார்ப னுதல்விழியன், றோலுடையன்,
கைம்மான் மறியன் கனன்மழுவன் கச்சாலை
யெம்மா னிமையோர்க் கிறை. (தண்டி-மேற்)

இருவிகற்பு. (3)

இன்னிசை வெண்பா

904. தனிச்சொ லின்றி யொருவிகற் பானும்
     தனிச்சொ லின்றி யிருவிகற் பானும்