யாப்பதிகாரம் | 424 | முத்துவீரியம் |
தனிச்சொ லின்றிப் பலவிகற்
பானும்
தனிச்சொற் பெற்றுப் பலவிகற்
பானும்
தனிச்சொன் மூன்றா மடியிற்
றழுவி
யிருவிகற் பானும் வருவதின்
னிசையே.
என்பது, தனிச்சொலின்றி
யொருவிகற்பானும், தனிச்சொலின்றி யிருவிகற்பானும்,
தனிச்சொலின்றிப்
பலவிகற்பானும், தனிச்சொற் பெற்றுப்
பலவிகற்பானும், தனிச்சொல்
மூன்றா மடியிற்
பெற்று இருவிகற்பானும் வருவது இன்னிசை
வெண்பாவாகும்.
(வ-று.)
துகடீர் பெருஞ்செல்வந்
தோன்றியக்காற் றொட்டுப்
பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க
வகடுற யார்மாட்டு நில்லாது செல்வஞ்
சகடக்கால் போல வரும். (நாலடியார்)
ஒருவிகற்பு.
உவர்நிலத் திற்பிறந்த
வுப்பினைச் சான்றோர்
விளைநிலத்தி னெல்லின் விழுமிதாக் கொள்வர்
கடைநிலத்தோ ராயினுங் கற்றுணர்ந் தோரைத்
தலைநிலத்துள் வைக்கப்படும். (நாலடியார்)
பலவிகற்பு.
பிறவும் வந்துழிக் காண்க. (4)
இதுவுமது
905. அடியடி தோறுந் தனிச்சொற்
பெற்று
வருவது மதனியல் பாமென மொழிப.
என்பது, அடிகடோறுந் தனிச்சொற்
பெற்றுவருவதும் இன்னிசை வெண்பா.
(வ-று.)
மழையின்றி மாநிலத்தார்க்
கில்லை, மழையும்
தவமிலா னில்வழி யில்லை, தவமும்,
அரசிலா னில்வழி யில்லை, அரசனும்,
இல்வாழ்வா னில்வழி யில். (5)
|