பக்கம் எண் :
 
யாப்பதிகாரம்437முத்துவீரியம்

     ஐந்துறுப் பொடும்வர லம்போ தரங்க
     ஒத்தா ழிசைக்கலி யாமுரை தரினே.

என்பது, நாற்சீரடியும் முச்சீரடியும் இருசீரடியும் ஆகிய வம்போதரங்க வுறுப்பைத்
தாழிசைக்குந் தனிச்சொற்கு நடுவிற் கொண்டு தரவுதாழிசை அம்போதரங்கம் தனிச்சொல்
சுரிதக மாகிய ஐந்துறுப்பையு முடைத்தாய் வருவது அம்போதரங்க வொத்தாழிசைக்
கலிப்பா வாகும்.

(வ-று.)

கெடலரு மாமுனிவர் கிளர்ந்துடன் றொழுதேத்தக்
கடல்கெழு கனைசுடரிற் கலந்தொளிரும் வாலுளைய
அழலவிர் சுழல்செங்க ணரிமாவாய் மலைந்தானைத்
தாரொடு முடிபிதிரத் தமனியப் பொடிபொங்க
வார்புன லிழிகுருதி யகலிட முடனனைப்பக்
கூருகிரான் மார்பிடந்த கொலைமலி தடக்கையோய்
முரசதிர் வியன்மதுரை முழுவதுந் தலைபனிப்பப்
புரைதொடித் திரடிண்டோள் போர்மலைந்த மறமன்னர்
அடியொடு முடியிறுப்புண் டயர்ந்தவர் நிலஞ்சேரப்
பொடியொடு வெங்களத்துப் புடைத்ததுநின் புகழாமோ
கலியொலி வியனுலகங் கலந்துட னனிநடுங்க
வலியிய லவிராழி மாறெறிந்த மருட்சோர்வு
மாணாதா ருடம்பொடு மறம்பிதிர வெதிர்கலங்கிச்
சேணுய ரிருவிசும்பிற் செகுத்ததுநின் சினமாமோ
படுமணி யினநிரைகள் பரந்துட னிரிந்தோடக்
கடுமுர ணெதிர்மலைந்த காரொலி யெழிலேற
வெரிநொடு மருப்பொசிய வீழ்ந்துதிறம் வேறாக
வெருமலி பெருந்தொழுவி னிறுத்ததுநின் னிகலாமோ
இலங்கொளி மரகத மெழின்மிகு வியன்கடல்
வலம்புரித் தடக்கை மாஅ னின்னிறம்
விரியிணர்க் கோங்கமும் வெந்தெரி பசும்பொனும்
பொருகளி றட்டோய் புரையு நின்னுடை
கண்கவர் கதிர்முடி கனலுஞ் சென்னியை
தண்சுட ருறுபகை தவிர்த்த வாழியை
ஒலியிய லுவண மோங்கிய கொடியினை
வலிமிகு சகட மாற்றிய வடியினை.
போரவுணர்க் கடந்தோய் நீ
புணர்மருதம் பிளந்தோய் நீ
நீரகல மளந்தோய் நீ
நிழறிகழும் படையோய் நீ.