பக்கம் எண் :
 
யாப்பதிகாரம்438முத்துவீரியம்

ஊழிநீ யுலகுநீ யுருவுநீ யருவுநீ
ஆழிநீ யருளுநீ யறமுநீ மறமுநீ.

எனவாங்கு,

அடுதிற லொருவநிற் பரவுது மெங்கோன்
தொழுகழற் கொடும்பூட் பகட்டெழின் மார்பிற்
கயலொடு கலந்த சிலையுடைக் கொடுவரி
புயலுறழ் தடைக்கப் போர்வே லச்சுதன்
தொன்றுமுதிர் கடலுலக முழுதும்
ஒன்றுபுரி திகிரி யுருட்டுவோ னெனவே. (36)

வண்ணக வொத்தாழிசைக் கலிப்பா

937. தாழிசை யம்போ தரங்கக் கிடையே
     அராக மடைந்துமுன் றரவு தாழிசை
     யராக மம்போ தரங்கந் தனிச்சொற்
     சுரிதக மாறொடு தோன்றுவ வண்ணக
     ஒத்தா ழிசைக்கலி யாமுரை தரினே.

என்பது, அம்போதரங்கத்துக்கும் தாழிசைக்கும் நடுவே அராகவுறுப்புப் பெற்றுத்
தரவு தாழிசை அராகம் அம்போதரங்கம் தனிச்சொல் சுரிதகம் ஆகிய ஆறுறுப்போடும்
வருவது வண்ணக வொத்தாழிசைக் கலிப்பாவாகும்.

(வ-று.)

விளங்குமணிப் பசும்பொன்னின் விரித்தமைத்துக் கதிர்கான்றுறுங்
துளங்குமணிக் கனைகழற்காற் றுறுமலர் நறும்பைந்தார்
பரூஉத்தடக்கை மதயானைப் பணையெருத்தின் மிசைத்தோன்
குரூஉக்கொண்ட மணிப்பூணோய் குறையிரந்து முந்நாட்கண்
மாயாத வனப்பினையாய் மகிழ்வார்க்கு மல்லார்க்குந்
தாயாகித் தலையளிக்குந் தண்டுறை யூரகேள்.
காட்சியாற் கலப்பெய்தி யெத்திறத்துங் கதிர்ப்பாகி
மாட்சியாற் கறியாத மரபொத்தாய் கரவினாற்
பிணிநலம் பெரிதெய்திப் பெருந்தடந்தோள் வனப்பழிய
அணிநலந் தனியேவந் தருளுவது மருளாமோ.
அன்பினா லமிழ்தளைஇ யறிவினாற் பிறிதின்றிப்
பொன்புனை பூணாகம் பசப்பெய்தப் பொழிலிடத்துப்
பெருவரைத்தோ ளருளுதற் கிருளிடைத் தமியையாய்க்
கருவரைத்தோள் கதிர்ப்பிக்குங் காதலுங் காதலோ,
பாங்கனையே வாயிலாப் பல்காலும் வந்தொழுகும்
தேங்காத காவினையுந் தெளியாத விருளிடைக்கட்