பக்கம் எண் :
 
யாப்பதிகாரம்447முத்துவீரியம்

ஏந்திசைத் தூங்கலோசை

ஒன்றிய வஞ்சித் தளையா னொழுகுவ
தேந்திசைத் தூங்க லெனப்படு மெனலே.

என்பது, ஒன்றியவஞ்சித் தளையான் வருஞ்செய்யுள் ஏந்திசைத்
தூங்கலோசையாகும்.

(வ-று.)

1வளவயலிடைக் களவயின்மகிழ். (55)

பிரிந்திசைத் தூங்கலோசை

956. ஒன்றாத வஞ்சித் தளையான் வருமது
     பிரிந்திசைத் தூங்க லெனப்பெயர் பெறுமே.

என்பது, ஒன்றாத வஞ்சித்தளையான் வருவது பிரிந்திசைத் தூங்கலோசை யாகும்.

(வ-று.)

2பூந்தாமரைப் போதலமர. (56)

அகவற்றூங்க லோசை

957. இவ்விரு தளையும் பிறவும் விரவித்
     தொடருவ தகவற் றூங்கலா மெனலே.

என்பது, ஒன்றிய வஞ்சித்தளையும் ஒன்றாத வஞ்சித்தளையும் பிறதளைகளும்
விரவிவருவது அகவற் றூங்க லோசையாகும்.

(வ-று.)

பூந்தாமரைப் போதலமரத்
தேம்புனலிடை மீன்றிரிதரும்
வளவயலிடைக் களவயின்மகிழ் (57)

வஞ்சித் தாழிசை

958. குறளடி நான்கா யொருபொருள் மேல்மூன்
     றடுக்கி வருவது வஞ்சித் தாழிசை.

1. இப்பாடல் 446 ஆம் பக்கத்திற் காண்க.

2. இப்பாடல் 446 ஆம் பக்கத்திற் காண்க.