யாப்பதிகாரம் | 448 | முத்துவீரியம் |
என்பது, இருசீரடி நான்காய் ஒரு
பொருண் மேன் முன்றடுக்கி வருவது வஞ்சித்
தாழிசையாகும்.
(வ-று.)
மடப்பிடியை மதவேழந்
தடக்கையான் வெயின்மறைக்கு
மிடைச்சுர மிறந்தார்க்கே நடக்குமென் மனனேகாண்
படையை யிரும்போத்துத் தோகையான் வெயின்மறைக்குங்
காடக மிறந்தார்க்கே யோடுமென் மனனேகாண்
இரும்பிடியை யிகல்வேழம் பெருங்கையான் வெயின்மறைக்கு
மருஞ்சுர மிறந்தார்க்கே
விரும்புமென் மனனேகாண். (58)
வஞ்சித்துறை
959. இருசீ ரடிநான் காய்வரல்
வஞ்சித்
துறையா மெனப்பெயர் சொல்லப்
படுமே.
என்பது, இரு சீரடி நான்காய் வருவது
வஞ்சித் துறையாகும்.
(வ-று.)
காமருசித்த,
ராம னிடத்திற்
போமணல் சொற்ற,
சீர்மை யுரைப்பாம். (59)
வஞ்சி விருத்தம்
960. சிந்தடி நான்காய்ச் செல்வது
வஞ்சி
விருத்த மென்மனார் மெய்யுணர்ந்
தோரே.
என்பது, முச்சீரடி நான்காய்
வருவது வஞ்சி விருத்தமாகும்.
(வ-று.)
ஒட்ட னென்றனை யும்பருஞ்
சிட்ட னென்றுகொள் சித்தனை
துட்ட வென்று சுளித்தனர்,
வெட்டி ருந்தடமேவினார். (60)
மருட்பா
961. புறநிலை கைக்கிளை
யென்றிப்
பொருண்மிசை
வெண்பா முதல்வந் தகவல்பின் வருவது
மருட்பா வெனப்பெயர் வைக்கப்
படுமே.
|