யாப்பதிகாரம் | 449 | முத்துவீரியம் |
என்பது, புறநிலை கைக்கிளை ஆகிய
பொருள்களைக் கொண்டு வெண்பா முதலில்
வந்து
அகவல் பின்னாக வருவது மருட்பாவாகும்.
(வ-று.)
தென்ற லிடைபோழ்ந்து
தேனார் நறுமுல்லை
முன்றின் முகைவிரியு முத்தநீர்த் - தண்கோளூர்க்
குன்றமர்ந்த கொல்லேற்றா
னிற்புறங் காப்ப
வென்றுந் தீரா நண்பிற் றேவர்
சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே. (61)
செய்யுளியல் முற்றும்.
3. ஒழிபியல்
இகர, உகர, ஐகாரக்
குறுக்கங்கள் அலகுபெறாத இடம்
962. தளையுஞ் சீருந்
தபவரிற் குறுகிய
இ, உ, ஐ, யு மிசைபெறா வென்ப.
என்பது, தளையும் சீரும்
கெடவருங்கால் குற்றியலிகரமும்
குற்றியலுகரமும்,
ஐகாரக் குறுக்கமும் அலகு
காரியம் பெறாவாம்.
(வ-று.)
‘‘சிறுநன்றி
யின்றிவர்க்கியாஞ் செய்தக்கால் நாளைப்
பெறுநன்றி பின்னும் பெரிதென்-றுறுநன்றி
தானவாய்ச் செய்வதுந் தானமன் றென்பவே
வானவா முள்ளத் தவர்.’’
குற்றியலிகரம்.
‘‘கொன்றுகோடு நீடு குருதி பாயவும்
சென்று கோடுநீடு செழுமலை பொருவன
வென்று கோடுநீடு விறல்வேழம்
என்று மூடுநீடு பிடியுள போலும்
அதனால்,
இண்டிடை யிரவிவண் நசைஇ வரின்
வண்டுண் கோதை உயிர்வா ழலளே.’’
குற்றியலுகரம்.
|