யாப்பதிகாரம் | 454 | முத்துவீரியம் |
தக்கார் தகவில ரென்ப
தவரவர்
எச்சத்தாற் காணப் படும்.
(திருக்குறள்)
இனவெதுகை.
பகலேபல் பூங்கானற் கிள்ளை
யோப்பியும்
பாசிலைக் குழவியொடு கூதளம் விரைஇப்
பின்னும் பிணியவிழ்ந்த நன்னெடுங் கூந்தல்
பீர்ங்கப் பெய்து தேம்படத் திருகிப்
பூந்தார் மார்ப புனத்துட் டோன்றிப்
பெருவரை யடுக்கத் தொருவே லேந்திப்
பேயு மறியா மாவழங்கு பெருங்காட்டுப்
பைங்க ணுழுவைப் படுபகை வெரீஇப்
பொங்கு சினந்தணியாப் பூநுத லொருத்தல்
போகாது வழங்கு மாரிரு ணடுநாள்
பௌவத் தன்ன பாயிரு ணீந்தி
இப்பொழுது வருகுவை யாயின்
நற்றார் மார்ப தீண்டலெங்
கதுப்பே.
வருக்கமோனை.
ஆர்கலி யுலகத்து மக்கட்
கெல்லாம்
ஓதலிற் சிறந்தன் றொழுக்க
முடைமை.
நெடின்மோனை.
கயலே ருண்கண் கலுழ நாளும்
சுடர்புரை திருநுதல் பசலை பாயத்
திருந்திழை யமைத்தோ ளரும்பட ருழப்பப்
போகல் வாழியைய பூத்த
கொழுங்கொடி
அணிமலர் தயங்கப் பெருந்தண் வாடை
வரும் பொழுதை.
இனமோனை (17)
ஆசெதுகை
979. ய-ர-ல-ழ, விடையுறி னாசெனப்
படுமே.
என்பது, ய-ர-ல-ழ இந்நான்கு
மெய்களும் இடைவரல் ஆசெதுகையாகும்.
(வ-று.)
காய்மாண்ட தெங்கின் பழம்வீழக்
கமுகி னெற்றிப்
பூமாண்ட தீந்தேன் றொடைகீறி
வருக்கை போழ்ந்து
|