யாப்பதிகாரம் | 453 | முத்துவீரியம் |
என்பது, கலிப்பாவினுள்
வெண்பா வடியும் ஆசிரியவடியு மயங்கும். (15)
இதுவுமது
977. கலியினு மகவ லினுமைஞ்
சீரடி
வருவது முளவென வகுத்தனர் புலவர்.
என்பது, கலிப்பாவினுள்ளும்
ஆசிரியப் பாவினுள்ளும் ஐஞ்சீரடியும்
வரப்பெறும்.
(வ-று.)
அணிகிளர் சிறுபொறி யவிர்துத்தி
மாநாகத் தெருத்தேறி.
கலிப்பா.
உமணர்ச் சேர்ந்து கழிந்த
மருங்கின கன்றலை.
ஆசிரியப்பா. (16)
எதுகையும் மோனையும்
978. வருக்க நெடிலினம்
வந்தா லெதுகையும்
மோனையு மாமென மொழியப் படுமே.
என்பது, வருக்கவெழுத்தும்
நெடிலெழுத்தும் இனவெழுத்தும் எதுகையும்
மோனையுமாக வந்தால், அவற்றை வருக்கவெதுகை நெடிலெதுகை
இனவெதுகை,
வருக்கமோனை நெடில்
மோனை இனமோனை எனப் பெயரிட்டு
வழங்கப்படும்.
(வ-று.)
நீடிணர்க் கொம்பர்க் குயிலாலத்
தாதூதிப்
பாடும்வண் டஞ்சி யகலும் பருவத்துத்
தோடார் தொடிநெகிழ்த்தா
ருள்ளார் படலொல்லா
பாடமைச் சேக்கையுட் கண்.
வருக்க வெதுகை.
ஆவா வென்றே யஞ்சின
ராழ்ந்தா
ரொருசாரார்
கூகூ வென்றே கூவிளி கொண்டா
ரொருசாரார்
மாமா வென்றே மாய்ந்தனர் நீந்தா
ரொருசாரார்
ஏகீர் நாகீ ரென்செய்து மென்றா
ரொருசாரார்.
நெடில்எதுகை.
|