யாப்பதிகாரம் | 452 | முத்துவீரியம் |
என்பது, இவை யொழிந்த
சீர்களெல்லாம் எல்லாப் பாவினுள்ளும்
மயங்கும். (9)
971. எல்லாத் தளைகளு மிவற்றோ
ரற்றே.
என்பது, எல்லாத் தளைகளும்
எல்லாப் பாவினுள்ளும் எல்லாப் பாவினத் துள்ளும்
வந்து மயங்கும். (10)
வஞ்சிச் சீர்கள் வெண்பாவினுட்
புகாமை
972. வெண்பா வில்வஞ்சி விரவப்
பெறாவே.
என்பது, எல்லாச் சீரும்
எல்லாப் பாவினுள்ளும் பாவினத் துள்ளும் வந்து
மயங்கப்
பெறும் என்றாராயினும் வஞ்சிச் சீர் நான்கும்
வெண்பாவினுட் புகப் பெறாவாம். (11)
வெண்பாவில் வேற்றுத்தளை
விரவாமை
973. வெண்பா வயற்றளை விரும்பா
தொழுகும்.
என்பது, வெண்பா இயற்சீர்
வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் அன்றி
வேற்றுத்தளை விரவப் பெறாவாம். (12)
அடி மயக்கம்
974. இயற்றளை வெள்ளடி வஞ்சியின்
பாதம்
அகவற் பாவினு ளடையப் பெறுமே.
என்பது, இயற்சீர்
வெண்டளையான், வந்த வெண்பா வடியும் வஞ்சியடியும்
ஆசிரியப் பாவினுள் வந்து
மயங்கும். (13)
இதுவுமது
975. வஞ்சியு ளகவ லடிகலி
யடியும்
விரவி வரப்பெறும் விளம்புங்
காலே.
என்பது, வஞ்சிப் பாவினுள்
ஆசிரிய வடியும் கலியடியும் வரும் . (14)
இதுவுமது
976. கலியினுள் வெள்ளடி யகவலுங்
கலக்கும்.
|