பக்கம் எண் :
 
யாப்பதிகாரம்451முத்துவீரியம்

(வ-று.)

உண்ணா னொளிநிறா னோங்குபுகழ் செய்யான்
துன்னருங் கேளிர் துயர்களையான்-கொன்னே
வழங்கான் பொருள்காத் திருப்பானேல் அஆ
இழந்தானென் றெண்ணப் படும். (நாலடியார்) (4)

முதனிலை அளபெடையும் கடைநிலை அளபெடையும் அலகு பெறுமாறு

966. முதனிலை யளபெடை நேர்நே ராங்கடை
     நிலையள பெடைநிரை நேரா கும்மே.

என்பது, தனிநிலையளபெடை நேர் நேராகும், இறுதிநிலை யளபெடை நிரை
நேராகும்.

(வ-று.)

ஏஎர்சிதைய - முதனிலையளபு; வழாஅ லெலாஅநின், 

இறுதி நிலையளபு. (5)

மாச்சீர்க் கலியுள் புகாமை

967. மாச்சீர் கலியுள் வரப்பெறா வென்ப.

என்பது, தேமா புளிமா ஆகிய சீரிரண்டும் கலிப்பாவினுட் புகாவாம்.

(வ-று.) வந்துழிக் காண்க. (6)

கனிச்சீர்கள் கலியுட் புகாமை

968. விளங்கனி கலிப்பாவி னுட்புகா வெனலே.

என்பது, கருவிளங்கனி கூவிளங்கனி ஆகிய விரண்டும் கலிப்பாவினுட் புகாவாம். (7)

கனிச்சீர்கள் ஆசிரியப்பாவில் புகாமை

969. அகவ லிடத்து மடையப் பெறாவே.

என்பது, முற்கூறிய கருவிளங்கனி கூவிளங்கனி ஆசிரியப்பா வினுட் புகாவாம். (8)

970. இவைநீங் கியசீ ரெல்லா மயங்கும்.